#BREAKING:10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு.! தேர்வு ரத்து செய்யப்படவில்லை - தமிழக அரசு
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தமிழகத்தில் ஒன்பதாம் வகுப்பு வரை அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றவர்கள் அறிவிக்கப்பட்டது. அதேபோல பத்தாம் வகுப்புத் தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டன. மே மாதம் தேர்வுகளை நடத்தி முடிக்க தமிழக பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டு வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
அதே நேரத்தில் கொரோனா தொற்றும் அதிகரித்து வருகிறது. ஊரடங்கு இன்னும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு நடுவே 10 ஆம் வகுப்பு தேர்வு பற்றிய குழப்பமான கருத்து பரவி வருவதால் மாணவ மாணவிகளும் என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு ஏப்ரல் 30-ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இதையெடுத்து கருத்துதெரிவித்துள்ள பள்ளிக்கல்வித்துறை, "தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படவில்லை; ஒத்திவைக்கப்பட்டுள்ளன. ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும் 10ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படவில்லை. மறுதேதி, ஆலோசனைக்கு பிறகு விரைவில் அறிவிக்கப்படும்" என தெரிவித்துள்ளது.
#BREAKING:10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு.! தேர்வு ரத்து செய்யப்படவில்லை - தமிழக அரசு
Reviewed by Rajarajan
on
13.4.20
Rating:
கருத்துகள் இல்லை