நீட் தேர்வு விண்ணப்பத்தில் பிழை திருத்த மே 3 வரை கால அவகாசம்!

நீட் நுழைவுத் தேர்விற்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள், தங்களுடைய விண்ணப்பத்தில் உள்ள பிழைகளைத் திருத்த வரும் மே மாதம் வரையில் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக உள்ள கொரோனா வைரசினை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த மார்ச் தேதியன்று 24ல் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு மே 3ம் தேதி வரையில் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் அனைத்து வகை கல்வி நிறுவனங்களுக்கும் அறிவிக்கப்பட்ட விடுமுறையானது நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து மே 3ம் தேதியன்று நடைபெறவிருந்த நீட் நுழைவுத் தேர்வு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வு விண்ணப்பத்தில் பிழை திருத்த மே 3 வரை கால அவகாசம்!
Reviewed by Rajarajan
on
18.4.20
Rating:

கருத்துகள் இல்லை