Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

ஸ்மார்ட் குப்பைத் தொட்டி கொரோனா பரவாமல் தடுக்க லவ்லி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் அரிய கண்டுபிடிப்பு! LPU students develop smart dustbin ‘Ally’

  CREDIT TO EDEXLIVE

LPU students develop smart dustbin ‘Ally’  

                                                   
இந்தியாவில் கரோனா வைரஸ் கட்டுப்படுத்த உறவு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மக்களிடையே சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. நோய்த்தொற்று பரவாமல் இருக்க சுகாதார பணியாளர்களைக் கொண்டு தூய்மைப் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் பஞ்சாபிலுள்ள லவ்லி பல்கலைக்கழகம், தூய்மைப் பணியாளர் மற்றும் மருத்துவ பணியாளர்கள் கொரோனா வைரஸ் தாக்குதலிலிருந்து பாதுகாத்துக்கொள்ள புதுமையான வழிமுறை ஒன்றை உருவாக்கியுள்ளது. 



ஸ்மார்ட் குப்பை தொட்டி, இந்த ஸ்மார்ட் குப்பைத்தொட்டி ரோபோட்டிக் மூலமாக இயங்கக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதிலுள்ள சென்சார் கருவிகள் வாய்ஸ் கமாண்ட் மூலம் இயங்குவதால் சுகாதாரப் பணியாளர்கள் இதைக் கையாள்வது மிக எளிது. 3 அடி உயரமும், 1.5 அடி அகலமும் உள்ள இந்த குப்பைத் தொட்டிக்கு ’ஆலி’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. கொரோனா சிகிச்சை மேற்கொள்ளும் மருத்துவமனைகளில் பயன்படுத்துவதற்காக இது பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 



மேலும் மருத்துவமனையில் இருந்து வெளிவரக்கூடிய மருத்துவக் கழிவுகள் இதன்மூலம் சுகாதாரப் பணியாளர்கள் எவ்வித தோற்றதற்கு ஆளாகாமல் எளிதாக மருத்துவக் கழிவுகளை வெளியேற்ற இயலும் இந்த குப்பை தொட்டியில் சிறப்பம்சம் குப்பைகள் சேர்ந்து விட்டால் தானாகவே குப்பைகளை கொண்டு சேர்க்க வேண்டிய இடத்திற்கு கொண்டு சேர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த ஸ்மார்ட் குப்பைத்தொட்டி தனிமைப்படுத்தப்பட்டவர்களின் அறைகளில் உள்ள கழிவுகளை அப்புறப்படுத்துவதற்கு ஒரு சிறந்த கண்டுபிடிப்பாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
ஸ்மார்ட் குப்பைத் தொட்டி கொரோனா பரவாமல் தடுக்க லவ்லி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் அரிய கண்டுபிடிப்பு! LPU students develop smart dustbin ‘Ally’ ஸ்மார்ட் குப்பைத் தொட்டி கொரோனா பரவாமல் தடுக்க லவ்லி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் அரிய கண்டுபிடிப்பு! LPU students develop smart dustbin ‘Ally’  Reviewed by Rajarajan on 12.4.20 Rating: 5

கருத்துகள் இல்லை