வரும் கல்வியாண்டிற்கான புதிய மாற்றங்களுடன் அறிக்கை தயார் - கல்வித்துறை ஆணையர்
Was
வரும் கல்வியாண்டில், செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து, தமிழக அரசின் கல்வித் துறை ஆணையர் சிஜி தாமஸ் தலைமையில் 18 பேர் அடங்கிய குழு ஆய்வு மேற்கொண்டது.
அதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட பரிந்துரை அறிக்கையை, கல்வித்துறை ஆணையர், இன்று முதலமைச்சரிடம் தாக்கல் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அந்த பரிந்துரையில் இடம்பெற்றுள்ள புதிய மாற்றங்கள் குறித்து ஒரு சில தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படாமலிருக்க சுழற்சிமுறை வகுப்புகள், பாடத்திட்டங்கள் குறைப்பு, காலாண்டு, அரையாண்டு தேர்வுகளை தவிர்ப்பது உள்ளிட்ட சில அம்சங்கள் இடம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.
முதல்வரிடம் அறிக்கை தாக்கல் செய்த அடுத்த ஒரு சில தினங்களுக்குள் முழுமையான தகவல்கள் வெளியாகும் என கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வரும் கல்வியாண்டிற்கான புதிய மாற்றங்களுடன் அறிக்கை தயார் - கல்வித்துறை ஆணையர்
Reviewed by Rajarajan
on
14.7.20
Rating:
Reviewed by Rajarajan
on
14.7.20
Rating:



கருத்துகள் இல்லை