பொறியியல் படிப்புகளில் சேர துவங்கியது ஆன்லைனில் பதிவு..
Was
பொறியியல் படிப்புகளுக்கு இணையதளம் மூலம் மாணவர்கள் விண்ணப்ப பதிவு தொடங்கப்பட்டுள்ளது. 2020-ம் ஆண்டு பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு குறித்து சென்னை பிர்லா கோளரங்கத்தில் உயர் கல்விதுறை அமைச்சர் கே.பி அன்பழகன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், ஜூலை 15 மாலை 6 மணி முதல் ஆகஸ்ட் 16-ம் தேதி வரை பொறியியல் படிப்புக்களுக்கான விண்ணங்களை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்தார்.
தற்போது வரை பொறியியல் படிப்புக்காக 465 கல்லூரிகள் விண்ணப்பித்து இருப்பதாகவும், ஆகஸ்ட் 15-ம் தேதி வரை கல்லூரிகள் விண்ணப்பிக்க கால அவகாசம் இருப்பதாகவும் கூறினார். முழுமையாக கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட்ட பின்னர் தான் கல்லூரி மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
பொறியியல் படிப்புகளில் சேர துவங்கியது ஆன்லைனில் பதிவு..
Reviewed by Rajarajan
on
15.7.20
Rating:
Reviewed by Rajarajan
on
15.7.20
Rating:


கருத்துகள் இல்லை