தனியார் கல்லுாரிகளில் விண்ணப்ப படிவத்தை நேரில் வழங்க, தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் திடீரென வெளியிடப்பட்டதால், கல்லுாரிகளில் சேருவதற்கான விண்ணப்பம் பெற, மாணவர்கள் குவிந்துள்ளனர். இதை எதிர்பாராத கல்லுாரிகள், விண்ணப்ப படிவங்களை நகல் எடுத்து, மாணவர்களுக்கு வழங்குகின்றன.தற்போது, பஸ் வசதிகள் உள்ளிட்ட பொது போக்குவரத்து இல்லாததால், கல்லுாரிகளுக்கு வர, மாணவ - மாணவியர் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். மேலும், ஊரடங்கு அமலில் உள்ளதால், கூட்டம் கூடுவதற்கும் அனுமதிஇல்லை.இது குறித்து, கல்லுாரி கல்வி இயக்குனரகம் சார்பில், அனைத்து கல்லுாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், ஆன்லைனில் விண்ணப்பம் பதிவு செய்யப்படுகிறது.
இதை பின்பற்றி, தனியார் கல்லுாரிகளிலும் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பம் பதிவு செய்ய வேண்டும். நேரடியாக விண்ணப்ப படிவங்களை வழங்கக் கூடாது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
இதை பின்பற்றி, தனியார் கல்லுாரிகளிலும் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பம் பதிவு செய்ய வேண்டும். நேரடியாக விண்ணப்ப படிவங்களை வழங்கக் கூடாது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தனியார் கல்லுாரிகளில் விண்ணப்ப படிவத்தை நேரில் வழங்க, தடை விதிக்கப்பட்டுள்ளது.
Reviewed by Rajarajan
on
18.7.20
Rating:
கருத்துகள் இல்லை