Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

கொரோனா‌வால் ‌‍‌குடும்பத்தில் ஒருவர் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தால் வீட்டை எப்படி சுத்தம் செய்ய வேண்டும்..?


Was

கொரோனாவின் வேகம் நாளுக்கு நாள் அதிகரிப்பதால் அனைவரும் எச்சரிக்கையுடன் செயலாற்றுவது அவசியம். அந்தவகையில் உங்கள் வீட்டில் உள்ள நபர்களில் யாருக்கேனும் உடல் நலம் பாதிக்கப்பட்டால் உடனே வீட்டை சுத்தம் செய்வது அவசியம். அதேசமயம் சில வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். அவை என்னென்ன பார்க்கலாம்.

தனிமை : முதலில் பாதிக்கப்பட்ட நபரைத் தனிமைப்படுத்தி வையுங்கள். அந்த அறைக்குள் யாரும் செல்லாதபடி பார்த்துக்கொள்ளுங்கள். இதனால் அவருக்கு தொற்று இருந்தாலும் மற்றவர்களுக்கும் பரவாமல் பார்த்துக்கொள்ளலாம்.

பொருட்களை சுத்தம் செய்தல் : வீட்டில் பொதுவாக உள்ள பொருட்களை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யுங்கள். உதாரணத்திற்கு டிவி ரிமோட், சாவிகள், சோஃபா, ஃபிரிட்ஜ் கதவு, வீட்டுக் கதவு போன்ற இடங்களை சுத்தம் செய்யுங்கள்.

படுக்கை அறை : பாதிக்கப்பட்டவர் அதிகமாக படுக்கையறையைப் பயன்படுத்தியிருக்கக் கூடும். எனவே படுக்கையறையில் உள்ள போர்வை, தலையணை உறை போன்றவற்றை துவைத்து சுத்தம் செய்வது அவசியம்.

ஹால் சுத்தம் : படுக்கையறைக்கு அடுத்தபடியாக ஹால் நேரம் கழிப்பதில் முக்கிய இடம். எனவே ஹாலில் அதிகம் தொடக்கூடிய பயன்படுத்தக் கூடிய பொருட்களை சுத்தம் செய்யுங்கள். சோஃபா கவர்கள், நாற்காலி , டேபிள் என அனைத்தையும் சுத்தம் செய்யுங்கள்.

கழிப்பறை : கழிப்பறையை கட்டாயம் பயன்படுத்தியிருக்கக் கூடும். எனவே அதை தினமும் டெட்டாயில், கிருமிநாசினி கொண்டு சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள். பாதிக்கப்பட்டவருக்கு தனி கழிப்பறை கொடுத்துவிடுங்கள். மற்றவர்கள் தனி கழிப்பறை பயன்படுத்துவது நல்லது. பயன்படுத்தும் முன் கழிப்பறை , கதவுகள், சிங்க் என அனைத்தையும் கழுவி சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்.

சமையலறை : சமையலறையிலும் அவர்கள் சென்றிருந்தால் அதையும் சுத்தம் செய்வது அவசியம். அதேசமயம் சமைக்கும் நபர் அடிக்கடி கைகளைக் கழுவிவிட்டு சமைப்பது நல்லது.

துணி துவைத்தல் : முதலில் பாதிக்கப்பட்டிருப்பவர் பயன்படுத்திய டவல், போர்வை, உடுத்திய உடைகள், கைக்குட்டை அனைத்தையும் தனியாக வைத்து அவற்றை துவைத்துவிடுவது நல்லது. அவரின் துணிகளை தனியாக துவையுங்கள்.

பாதுகாப்பு : வீட்டில் உள்ள நபர்கள் அடிக்கடி கைகளை கழுவி சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள். தினமும் வீட்டை துடைப்பது நல்லது. முடிந்தவரை வீட்டில் இருந்தாலும் மாஸ்க் அணிவது நல்லது. சமூக இடைவெளியைக் கடைபிடியுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உணவில் கவனம் செலுத்துவது நல்லது.
கொரோனா‌வால் ‌‍‌குடும்பத்தில் ஒருவர் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தால் வீட்டை எப்படி சுத்தம் செய்ய வேண்டும்..? கொரோனா‌வால் ‌‍‌குடும்பத்தில் ஒருவர் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தால் வீட்டை எப்படி சுத்தம் செய்ய வேண்டும்..? Reviewed by Rajarajan on 29.7.20 Rating: 5

கருத்துகள் இல்லை