M.Phil படிப்பு ரத்து, 6ம் வகுப்பு முதல் தொழிற்கல்வி போன்ற புதிய நடைமுறைகள் உடன் புதிய கல்வி கொள்கை அறிமுகம்
5ம் வகுப்பு வரை தாய்மொழிக் கல்வி கட்டாயம் என மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, தேசிய கல்விக் கொள்கை 2020-க்கு இன்று ஒப்புதல் வழங்கியது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர்கள் ரமேஷ் பொக்ரியால், பிரகாஷ் ஜவடேகர் ஆகியோர் இதனை தெரிவித்தனர். 34 ஆண்டுகளுக்குப் பிறகு கல்விக் கொள்கையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த கல்விக் கொள்கையில் முக்கிய சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை செயலாளர் அமித் கரே, 3வயது முதல் குழந்தைகளின் கல்வி கண்காணிக்கப்படும் என்றும், புத்தகம் மட்டுமின்றி செய்முறை மற்றும் விளையாட்டு மூலமாகவும் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
Was
புதிய கல்விக் கொள்கையில் 5ம் வகுப்பு வரை தாய்மொழி வழிக் கல்வி கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அமித் கரே, 6ம் வகுப்பு முதல் தொழிற்கல்வியின் அடிப்படைகள் கற்பிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். பொறியியல் போன்ற உயர்கல்வி படிப்புகளில் மாணவர்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு மீண்டும் படிப்பை தொடரலாம் என்றும் உயர் கல்வித்துறை செயலாளர் குறிப்பிட்டுள்ளார். M.Phil படிப்பு ரத்து செய்யப்படுவதாகவும், உயர்கல்விக்கான அமைப்புகளை ஒழுங்குபடுத்த ஒரே வாரியம் அமைக்கப்படும் என்றும் தெரிவித்த அமித் கரே, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதம் கல்வித்துறைக்கு ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். இந்த புதிய கல்விக் கொள்கைக்கு வரவேற்பு தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, எதிர்கால சந்ததியினரின் வாழ்வில் இது மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என குறிப்பிட்டுள்ளார்.
M.Phil படிப்பு ரத்து, 6ம் வகுப்பு முதல் தொழிற்கல்வி போன்ற புதிய நடைமுறைகள் உடன் புதிய கல்வி கொள்கை அறிமுகம்
Reviewed by Rajarajan
on
29.7.20
Rating:
கருத்துகள் இல்லை