Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

கணக்கு தாக்கல் செய்யுங்க...! வருமான வரித்துறை பிரசாரம்


வருமானவரி செலுத்துவோர், தாங்களாக முன்வந்து, கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்' என, வருமான வரித்துறை, மின்னணு பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளது.
Was
Income Tax Dept to scrutinise 4 lakh taxpayers under new e-assessment system


இதுகுறித்து, வருமான வரி அதிகாரிகள் கூறியதாவது:வருமான வரி செலுத்துவோர்,
தாங்களாக முன்வந்து, வரி செலுத்தவும், அது தொடர்பான கணக்கு தாக்கல் செய்யவும் வலியுறுத்தி, மின்னணு பிரசாரம் துவங்கப்பட்டுள்ளது. இந்த பிரசாரம், வரும், 31 வரை மேற்கொள்ளப்படும்.தங்களது நிதி பரிவர்த்தனைகளை சரிபார்த்துக் கொள்ளும்படி, வரி செலுத்துவோருக்கு, 'இ - மெயில்' மற்றும், எஸ்.எம்.எஸ்., அனுப்பப்படும். வரி செலுத்துவோர், தங்கள் வரியை, ஆன்லைன் வாயிலாக மதிப்பீடு செய்யும் வசதியை ஏற்படுத்தி தருவது, இந்த பிரசாரத்தின் முக்கிய நோக்கம்.



வரி செலுத்துவோர், தங்களின் அதிக மதிப்புள்ள பரிவர்த்தனைகள் குறித்து, சம்பந்தப்பட்ட இணையதளத்தில் தெரிவிக்கலாம். அதிக நிதி பரிவர்த்தனைகள் தொடர்பான கணக்கு விபரங்களை தாக்கல் செய்யாதோரின் தகவல்கள், ஆய்வு செய்யப்படும். கணக்கு தாக்கலில் உள்ள குறைகளை, சம்பந்தப்பட்ட வருமான வரி அதிகாரிகளை சந்திக்காமல், ஆன்லைன் வாயிலாகவே சமர்ப்பிக்கலாம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
கணக்கு தாக்கல் செய்யுங்க...! வருமான வரித்துறை பிரசாரம் கணக்கு தாக்கல் செய்யுங்க...! வருமான வரித்துறை பிரசாரம் Reviewed by Rajarajan on 20.7.20 Rating: 5

கருத்துகள் இல்லை