Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

மாணவர்கள் வீட்டில் இருந்தே தேர்வு எழுதலாம் சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு


Was

சென்னைப் பல்கலைக்கழகத்தை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள பிற பல்கலைக்கழகங்களும் இணைய வசதி இல்லாத மாணவர்கள், வீடுகளில் இருந்தே தேர்வு எழுதி விடைத்தாள்களை தபால் மூலம் அனுப்பலாம் என்று அறிவித்துள்ளன.


கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019-2020-ம் கல்வியாண்டில் ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெறாமல் போன இறுதி செமஸ்டர் தேர்வுகள் இம்மாத இறுதியில் நடைபெற உள்ளன. ஆன்லைனில் இறுதி செமஸ்டர் தேர்வுகளை நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளில் பல்கலைக்கழகங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு வருகின்றன. சென்னைப் பல்கலைக்கழகம், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் ஆன்லைனில் தான் தேர்வை நடத்துகின்றன.


ஆன்லைன் தேர்வை எழுத உள்ள மாணவர்கள் அவரவர் வீடுகளில் இருந்து, இணையதளம் மூலம் வினாத்தாளை பதிவிறக்கம் செய்து, பின்னர் A4 தாளில் விடைகளை எழுதி, விடைத்தாள்களை இணையதளத்தில் Upload செய்ய வேண்டும் என்று பல்கலைக்கழகங்கள் உத்தரவிட்டுள்ளன. வீடுகளில் இணைய வசதியின் வேகம் குறைவாக உள்ள மாணவர்கள், இணைய வசதி இல்லாத மாணவர்கள் விடைத்தாள்களை Speed Post மூலம் அவர்களின் கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கலாம் என்றும் பல்கலைக்கழங்கள் உத்தரவிட்டுள்ளன. 


மாணவர்கள் புத்தகத்தை வைத்து பார்த்து தேர்வு எழுதும் Open Book தேர்வாக ஆன்லைன் தேர்வு முறை அமைந்தாலும், தேர்வின் தரம் குறையாத வகையில் வினாத்தாள்களை மிகக் கடுமையாக தயாரிக்க வேண்டும் என்று கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாணவர்கள் வீட்டில் இருந்தே தேர்வு எழுதலாம் சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு மாணவர்கள் வீட்டில் இருந்தே தேர்வு எழுதலாம் சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு Reviewed by Rajarajan on 15.9.20 Rating: 5

கருத்துகள் இல்லை