JEE தேர்வு முடிவுகள் வெளியானது: 24 பேர் 100% தேர்ச்சி!
Was
JEE தேர்வு முடிவுகள் வெளியானது: 24 பேர் 100% தேர்ச்சி!
ஐ.ஐ.டி, என்.ஐ.டி உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் பொறியியல் இடங்களுக்கான அகில இந்திய பொறியில் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறுது. இந்தாண்டுக்கான JEE தேர்வுகள் கடந்த ஏப்ரல்-மே மாதங்களில் நடந்திருக்க வேண்டும். ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், பல்வேறு நெருக்கடிக்கு மத்தியில் கடந்த 1ம் தேதி முதல் 6ம் தேதிவரை, நாடு முழுவதும் 232 நகரங்களில், 660 மையங்களில் தேர்வு நடைபெற்றது.
இதில் 11,74,000 பேர் விண்ணப்பித்த நிலையில், 10,23,000 பேர் மட்டுமே தேர்வுகளை எழுதினர். தேர்வு நிறைவடைந்த 6 நாட்களில் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 24 மாணவர்கள் 100% மதிப்பெண் பெற்றுள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் யாரும் 100% மதிப்பெண் பெறவில்லை.
எனினும், தமிழகத்தைச் சேர்ந்த கவுரவ் ஆர்.கோச்சர் என்ற மாணவர் 99.99% மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார். இதேபோன்று, புதுச்சேரி மாநிலத்தில் விஸ்வநாதபள்ளி ராஜேஷ் 99.91% மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.
கருத்துகள் இல்லை