தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக பேரிடர் கால அவசர செய்தி
Was
*தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம், திருவள்ளுவர் மாவட்டம் பேரிடர் கால அவசர செய்தி*
*எனது பட்டதாரி ஆசிரியர் சொந்தங்களே*
*இந்த நோய் தொற்று காலகட்டத்தில் அனைத்து ஆசிரிய பெருமக்களும் பள்ளிக்கு வருகை புரிய வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறையிலிருந்து எந்த ஒரு எழுத்துப்பூர்வமான ஆணையும் இதுவரை பெறப்படவில்லை*
*மாநில அளவில் தான் பெறப்பட வில்லை என்றால் மாவட்ட அளவிலும் நமது உயர் அதிகாரியான முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களிடம் இருந்தும் எந்த முறையான எழுத்துப்பூர்வமான ஆணையும் பெறப்படவில்லை*
*இத்தகைய காலகட்டத்திலும் நம்முடைய பட்டதாரி ஆசிரிய பெருமக்கள் தினந்தோறும் பள்ளிக்குச் சென்று இந்த காலகட்டத்தில் செய்ய வேண்டிய கடமைகளை செய்து வருகிறார்கள்*
*தற்பொழுது நமது மாவட்டத்தில் இந்தக் கொடிய தொற்றுக்கு ஒரு தலைமை ஆசிரியை பலியாகியுள்ளார் அதே பள்ளியில் சில ஆசிரியருக்கு தொற்று உறுதியாகியுள்ளது என தகவல் வந்திருக்கிறது*
*எனவே நீங்கள் எல்லோரும் எச்சரிக்கையுடன் இருந்து பாதுகாப்பாக பணியாற்றுமாறும் வீட்டிலிருந்து மாணவர்களுக்கு தொலைபேசி மூலமாக தொடர்புகொண்டு தேவையான விளக்கங்களையும் தைரியத்தையும் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்*
*இயக்குனர் அல்லது முதன்மை கல்வி அலுவலர் அவர்களிடமிருந்து எழுத்துப்பூர்வமாக எந்த ஒரு ஆணையும் வராத பட்சத்தில் 100 சதவீத ஆசிரியர் பெருமக்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்பது கட்டாயமில்லை*
*எனவே அப்படி ஒரு ஆணை வரும் வரை பள்ளியில் மாணவர் சேர்க்கை பணி பாதிக்கப்படாத அளவு நமது ஆசிரியர் பெருமக்கள் சுழற்சி அடிப்படையில் தினந்தோறும் பள்ளிக்கு செல்ல வேண்டுமென்று அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது*
*உயிர் முக்கியம் என்று அரசாங்கம் சொல்கிறது*
*தனித்திரு விழித்திரு பாதுகாப்பாக இரு என்று அரசாங்கம் சொல்கிறது*
*அரசின் சொல்படி தனித்திருப்போம் விழித்திருப்போம்*
*பாதுகாப்பாக இருப்போம் சுழற்சி முறையில் பள்ளிக்கு சென்று பணி செய்வோம்*
*ஒரு சில தலைமை ஆசிரியர்களின் அச்சுறுத்தலுக்கு அடிபணிய வேண்டாம்*
*நமது உயிருக்கு உத்தரவாதம் அவர்களால் அளிக்க முடியாது*
*தற்போது இறந்து போன தலைமை ஆசிரியர் அவர்களின் குடும்பத்திற்கும் யார் ஒருவரும் அதற்கான ஈடினை கொடுத்திட இயலாது*
*உயிரோடு இருந்தால்தான் பணி செய்ய முடியும்*
*வருகைப் பதிவேட்டில் கேள்விக்குறி போடுவோம்*
*கோடு போடுவோம்*
*ஆப்சன்ட் போடுவோம்*
*சம்பளத்தை பிடிப்போம்*
*இப்படிப்பட்ட அச்சுறுத்தல்கள் ஒரு சில பள்ளிகளில் வந்து கொண்டிருப்தால் யாரும் பயப்பட வேண்டாம்*
*நாம் சரியாக பணியாற்றும் வரை எதற்காகவும் எந்த அச்சுறுத்தலாகவும் பயப்பட வேண்டிய அவசியமில்லை*
*அதேசமயம் வாரக்கணக்கில் மாதக்கணக்கில் பள்ளி பக்கமே எட்டிப் பார்த்திராத ஆசிரியர்களையும் இந்த நேரத்தில் வன்மையாக கண்டிக்கிறோம்*
*சுழற்சி அடிப்படையில் கூட பள்ளிக்குச் செல்லாமல் சங்கத்தின் பெயரை சொல்லி தர்மத்தை மீறி தலைமை ஆசிரியருக்கு எதிராக செயல்படுகின்ற எந்த ஒரு ஆசிரியருக்கும் சங்கம் துணை நிற்காது*
*கடமையை செய்வோம்*
*உரிமையை கோருவோம்*
*அநீதிக்கு எதிராக நிற்போம்*
*தர்மத்திற்கு தோள் கொடுப்போம்*
*இப்படிக்கு*
*தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்*
*திருவள்ளூர் மாவட்டம்...*
கருத்துகள் இல்லை