மாநில அரசு பாட புத்தகத்தில் இருந்து 97% வினாக்கள் நீட் தேர்வில் இடம்பெற்றதாக பள்ளி கல்வி துறை அறிவிப்பு!
MBBS, BDS உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு நாடு முழுவதும் கடந்த 13-ம் தேதி நடைபெற்றது. 720 மதிப்பெண்களுக்கு நடைபெற்ற தேர்வை நாடு முழுவதும் 14.37 லட்சம் மாணவர்கள் எழுதினர். நீட் தேர்வில் இடம்பெற்ற உயிரியல், வேதியியல், இயற்பியல் பாடங்களில் 97% வினாக்கள் மாநில அரசின் புதிய பாடப்புத்தகத்தில் இருந்து கேட்கப்பட்டதாக தமிழக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிரியல் பாடத்தில் இடம்பெற்றிருந்த 90 வினாக்களில் 87 வினாக்கள் 11 மற்றும் 12-ம் வகுப்பு பாடப்புத்தகங்களில் இருந்து கேட்கப்பட்டிருந்ததாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வேதியியல் பாடத்தில் இடம்பெற்றிருந்த 45 வினாக்களில் 43 வினாக்களும், இயற்பியல் பாடத்தில் இடம்பெற்றிருந்த 45 வினாக்களில் 44 வினாக்களும் 11 மற்றும் 12-ம் வகுப்பு பாடப்புத்தகங்களில் இருந்து கேட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில், கடந்த 2018-2019-ம் ஆண்டு 11-ம் வகுப்புக்கான பாடப்புத்தகமும், 2019-2020-ம் கல்வியாண்டில் 12-ம் வகுப்புக்கான பாடப்புத்தகமும் புதிதாக வெளியிடப்பட்டன.
CBSE பாடத்திட்டத்துக்கு இணையாக வடிவமைக்கப்பட்டிருந்த புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் நீட் தேர்வை எழுதிய பள்ளி மாணவர்கள் இந்த முறை அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறுவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். செப்டம்பர் இறுதியில் நீட் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மாநில அரசு பாட புத்தகத்தில் இருந்து 97% வினாக்கள் நீட் தேர்வில் இடம்பெற்றதாக பள்ளி கல்வி துறை அறிவிப்பு!
Reviewed by Rajarajan
on
16.9.20
Rating:
Reviewed by Rajarajan
on
16.9.20
Rating:


கருத்துகள் இல்லை