செல்போன் இல்லாத மாணவர்களுக்கு நேரில் சென்று பாடம் எடுக்கும் ஆசிரியர்கள்
கொரோனா ஊரடங்கு காரணமாக அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ளது. தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படுகிறது.
இந்நிலையில் கோவையில் ஆண்ட்ராய்டு மொபைல் வாங்க முடியாத ஏழை குழந்தைகள் இருக்கும் பகுதிகளுக்கு, அரசு பள்ளி ஆசிரியர்களே நேரடியாக சென்று பாடம் நடத்தி வருகின்றனர்.
Was
ஆண்ட்ராய்டு போன் இல்லாததால் பல மாணவர்களால் ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்ள முடியாத நிலை இருந்து வருகின்றது. இந்நிலையில் அனைத்து மாணவர்களுக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பள்ளித் தலைமை ஆசிரியரின் அனுமதி பெற்று மாணவர்களுக்கு அவர்கள் இருக்கும் வீட்டின் அருகிலேயே சென்று ஆசிரியர்கள் சிலர் பாடம் நடத்தி வருகின்றனர்.
அருகே உள்ள சோமயம்பாளையம் அரசு பள்ளி ஆசிரியர் கருப்பசாமி, அப்பகுதியில் மரத்தடியிலும், கோயில் முன்பாகவும் தினமும் பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்தி வருகிறார்.
மாணவர்களை சமூக இடைவெளி விட்டு அமரவைத்து, முகக் கவசம் அணிய வைத்து பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அரசுப் பள்ளி ஆசிரியர்களின் இந்த முயற்சியை ஏழை பெற்றோர் வரவேற்றுள்ளனர்.
கருத்துகள் இல்லை