நர்சரி மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் 40% கல்வி கட்டணம் செலுத்த செப்டம்பர் 30 வரை கால அவகாசம்! - சென்னை உயர்நீதிமன்றம்
Was
கட்டணம் வசூலிக்க தடை விதித்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து தனியார் பள்ளிகள் தொடர்ந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பள்ளிக் கல்வித் துறை செயலாளர் தீரஜ்குமார் காணொலி வாயிலாக ஆஜராக விளக்கம் அளித்தார்.
அப்போது, கூடுதல் கட்டணம் வசூலித்ததாக இதுவரை 75 பள்ளிகள் மீது புகார் வந்துள்ளது. கூடுதல் கட்டணம் வசூலித்த 75 பள்ளிகளில், இதுவரை 29 பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும், மற்ற பள்ளிகள் மீதான புகார்கள் விசாரணையில் உள்ளதாகவும் பள்ளி கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
அரசு உத்தரவை மீறி அதிகக் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளின் பட்டியலை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் தனியார் பள்ளிகளில் 40% முதல் தவணைக் கட்டணத்தை செலுத்த செப்டம்பர் 30 வரை அவகாசத்தை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கருத்துகள் இல்லை