மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வுகள், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆன்லைனில் தேர்வு
Was
2019-2020ஆம் கல்வியாண்டில், ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெறவிருந்த இறுதி செமஸ்டர் தேர்வுகள், வரும் 15ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. இவற்றை முழுவதும் ஆன்லைனிலேயே நடத்த அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் உயர்கல்வித் துறை அனுமதி வழங்கி உள்ளது. இதையடுத்து, ஆன்லைனில் இறுதி செமஸ்டர் தேர்வுகளை நடத்த அண்ணா பல்கலைக்கழகம் முழு வீச்சில் தயாராகி வருகிறது.
தேர்வின்போது மாணவர்கள் காப்பி அடிப்பதைத் தடுக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளதாகவும், தேர்வின் போது மாணவர்கள் கணினி திரையைத் தவிர வேறு எங்காவது திரும்பினாலோ, பார்த்தாலோ முதல் முறை எச்சரிக்கை விடுக்கப்படும் என்றும், தொடர்ந்து பார்த்தால் Negative Marks வழங்கப்படும் என்றும், மீறினால் தேர்வில் இருந்து வெளியேற்றப்படுவர் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
ஒரு மாணவர் காலை 9 மணிக்கு Login செய்தால் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு அந்த குறிப்பிட்ட பக்கத்தில் மட்டுமே இருக்க முடியும். இணையத்திற்கோ, வேறு பக்கங்களுக்கோ செல்வது தடை செய்யப்பட்டுள்ளது.
கையில் புத்தகம் இருந்தால் கூட அவரால் பார்த்து எழுத முடியாத வகையில் அனைத்து கோணங்களிலும் யோசித்து, Artificial Intelligence என்ற நவீன தொழில்நுட்பத்துடன் சாஃப்ட்வேர் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 மணி நேரத் தேர்வுக்கு பதில் 2 மணி நேரத் தேர்வாக இறுதி செமஸ்டர் தேர்வுகள் நடைபெற உள்ளதாகவும், Objective Type கேள்விகள் கேட்கப்பட உள்ளதாகவும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இதனிடையே, கலை, அறிவியல் கல்லூரிகளுக்கும் ஆன்லைன் முறையிலேயே தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஆனால் உயிரியல், விலங்கியல் உள்ளிட்ட பாடங்களில் படங்களை வரைந்து பாகங்களை குறித்தல் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் இருப்பதால் அதற்கு இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள் இல்லை