கல்லுாரி இறுதி செமஸ்டர் தேர்வுகளை நீட் தேர்வு போல நடத்த கோரிக்கை
Was
நீட் தேர்வு போல், இந்தாண்டு, கல்லுாரி இறுதி செமஸ்டர் தேர்வுகளையும் நேரடியாக நடத்த வேண்டும்; ஆன்லைனில் நடத்தும் முடிவை கைவிட வேண்டும் என, மதுரை காமராஜ் பல்கலை தனியார் கல்லுாரி நிர்வாகிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தற்போதைய சூழலில், படித்த, கல்லுாரிக்கு செல்ல இயலாத மாணவர்கள், அவர்களது இருப்பிடத்திற்கு அருகில் உள்ள கல்லுாரியில் தேர்வு எழுதலாம். கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி, நீட் தேர்வை, 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதியுள்ளனர். அதுபோல், விதிமுறைகளை பின்பற்றி, எழுத்து முறை தேர்வாக நடத்த, கல்லுாரிகள் தயாராக உள்ளன. அதற்கான வழிகாட்டுதல் முறையை வெளியிட வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்லுாரி இறுதி செமஸ்டர் தேர்வுகளை நீட் தேர்வு போல நடத்த கோரிக்கை
Reviewed by Rajarajan
on
16.9.20
Rating:
கருத்துகள் இல்லை