பத்துக்கும் மேற்பட்ட பி.எட்., கல்லுாரிகள் மூடல்
Was
ஆசிரியர் பணியில் சேர, ஆசிரியர் கல்வியியல் படிப்பான, பி.எட்., படிக்க வேண்டும். பி.எட்., படிப்புக்காக, தமிழகத்தில், 700 ஆசிரியர் கல்வியியல் கல்லுாரிகள் செயல்படுகின்றன. மூன்று ஆண்டுகளுக்கு முன், பி.எட்., படிப்பானது, ஓராண்டில் இருந்து இரண்டாண்டாக அதிகரிக்கப்பட்டது. இதன் காரணமாக, பி.எட்., படிப்பதற்கு கூடுதல் செலவு ஏற்பட்டது. பல ஏழை, நடுத்தர குடும்பத்தினர், பி.எட்., படிக்கும் முடிவை மாற்றினர். அதனால், தமிழகத்தில், பி.எட்., கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை பெருமளவு குறைந்து உள்ளது.
ஆண்டுதோறும், 10க்கும் மேற்பட்ட கல்லுாரிகள் மாணவர் சேர்க்கையை நிறுத்தி வருகின்றன. இந்த ஆண்டில், 13 கல்லுாரிகள், தங்களுக்கு புதிதாக மாணவர் சேர்க்கை நடத்துவதற்கான அனுமதிவேண்டாம் என, கல்வியியல் பல்கலையிடம் தெரிவித்துள்ளன.
பத்துக்கும் மேற்பட்ட பி.எட்., கல்லுாரிகள் மூடல்
Reviewed by Rajarajan
on
16.9.20
Rating:
கருத்துகள் இல்லை