Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

தமிழ் பாடவேளைகளை குறைக்கும் முடிவை, சென்னை பல்கலை கைவிட கோரிக்கை



Was

சென்னை பல்கலையில், பட்டப் படிப்புகளுக்கான தமிழ்மொழி பாடவேளைகளின் எண்ணிக்கை, வாரத்திற்கு ஆறு என்பது, நான்காக குறைக்கப்பட்டுள்ளது .தமிழகத்தில், பட்டப்படிப்புகளுக்கான பாடத்திட்டங்களைப் பொறுத்தவரை, கலை மற்றும் அறிவியல் பாடங்களுக்கு ஒரு மொழித்தாள், ஒரு ஆங்கிலத் தாள், ஒரு முதன்மைத்தாள், ஒரு விருப்பப் பாடத்தாள் என, ஒவ்வொரு பருவத்திற்கும், நான்கு தாள்கள் இருக்கும். முதல் இரு ஆண்டுகளுக்கான, நான்கு பருவங்களுக்கு மட்டும், இந்த நடைமுறை இருக்கும்.

மூன்றாம் ஆண்டின் இரு பருவங்களிலும், முதன்மை பாடத்தாள்கள் மட்டுமே இருக்கும். ஒரு நாளைக்கு, ஐந்து பாடவேளைகள் வீதம், வாரத்திற்கு மொத்தம், ௩௦ பாடவேளைகள் நடத்தப்படும்; அவற்றில், ஆறு பாடவேளைகள், மொழிப்பாடமான தமிழுக்கு ஒதுக்கப்படும். இதுதான் காலம் காலமாக கடைப்பிடிக்கப்படு வரும் நடைமுறை.

ஆனால், சென்னை பல்கலை வெளியிட்டு உள்ள உத்தேச பாடத்திட்டத்தில், தமிழ் மொழிக்கான பாடவேளைகள், வாரத்திற்கு ஆறில் இருந்து நான்காக குறைக்கப்பட்டுள்ளன. தமிழ்ப்பாட வேளைகளை தியாகம் செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழ்ப் பாடவேளைகளை குறைக்கும் முடிவை, சென்னை பல்கலை கைவிட வேண்டும். இவ்வாறு, ராமதாஸ் கூறியுள்ளார்.

தமிழ் பாடவேளைகளை குறைக்கும் முடிவை, சென்னை பல்கலை கைவிட கோரிக்கை தமிழ் பாடவேளைகளை குறைக்கும் முடிவை, சென்னை பல்கலை கைவிட கோரிக்கை Reviewed by Rajarajan on 16.9.20 Rating: 5

கருத்துகள் இல்லை