Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

ஆசிரியர்களின் சம்பளம் இவ்வளவு... அவ்வளவு என வாயை பிளக்கும் மக்களுக்கு... மக்கள் பிரதிநிதிகள் சம்பளம் எவ்வளவு தெரியுமா..!



ஆசிரியர் ஒருவருக்கு இவ்வளவு சலுகைகளா? நல்ல சம்பளம்? இப்படி பல கேள்விகள் எழும் நம்முள். ஏனெனில் மாநில முதல்வர்கள் கவர்னர்களின் சம்பளம் லட்சக்கணக்கில் எனில், அவர்களுக்கு அளிக்கப்படும் சலுகைகள் ஏராளம்.


அந்த வகையில் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது பல மாநிலங்களின் முதல்வர்களின் சம்பளம், ஆளுனர்களின் சம்பளம், ஜனாதிபதி, துணை ஜனாதிபதியாகும்.




நம் நாட்டில் அதிக சம்பளம் வாங்குவது ஜனாதிபதி தான். இவருக்கு சம்பளம் 5 லட்சம் ரூபாய். இது வெறும் பேசிக் பே மட்டும் தான். இது தவிர மற்ற பல சலுகைகள் இணைத்தால், இது இன்னும் அதிகமாகும். இதே துணை ஜனாதிபதியின் சம்பளம் 4 லட்சம் ரூபாயாகும்.


மாநில ஆளுனர்களுக்கு சம்பளம்?

இதே மாநில ஆளுனர்களுக்கு 3.50 லட்சம் ரூபாயாகும். இத பிரதமரின் சம்பளல் 2.80 லட்சம் ரூபாயாகும். இதே மாநில ஆளுனர்களுக்கு 3.50 லட்சம் ரூபாய் சம்பளமாகும். இது பிரதமரின் சம்பளத்தினை விட அதிகம். எனினும் பிரதமர் பதவியில் இருப்பவர்களுக்கு, பதவி காலம் முடிந்தாலும் வாழ்நாள் முழுவதும் வாடகை இல்லாத தங்குமிடம் உண்டு.


பிரதமருக்கான சலுகைகள் என்னென்ன?

இவற்றோடு மருத்துவ செலவுகள், 14 அலுவலகப் பணியாளர்கள் உண்டு. இதற்கான செலவினையும் அரசே ஏற்றுக் கொள்கிறது. இதோடு சலுகை முடிந்துவிட வில்லை. கூடுதலாக 6 எக்ஸ்க்யூட்டிவ் வகுப்பு விமான டிக்கெட்டுகள், முதல் 5 ஆண்டில் இலவச ரயில் டிக்கெட்டுகள் என பலவும் கொடுக்கப்படுகின்றன.




நீதிபதிகளுக்கு எவ்வளவு சம்பளம்?

இவர்கள் தவிர உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கு மாதம் - 2,80 லட்சம் ரூபாயும், இதே உச்ச நீதிமன்ற நீதிபதி எனில் 2.50 லட்சம் ரூபாயும், தலைமை தேர்தல் ஆணையர் - 2.50 லட்சம் ரூபாயும், ரிசர்வ் வங்கியின் கவர்னருக்கு 2,50 லட்சம் ரூபாயும் சம்பளமாக பெறுகின்றனர். சம்பளம் தவிர மருத்துவ அலவன்ஸ், தங்குமிடம், போக்குவரத்து செலவு என தனித் தனியாக அலவன்ஸ்கள் உண்டு.


தமிழக முதல்வரின் சம்பளம் எவ்வளவு?

தமிழக முதல்வரின் சம்பளம் 2.20 லட்சம் ரூபாயாகும். அதிகபட்சமாக உத்தர பிரதேச முதல்வருக்கு 3.65 லட்சம் ரூபாயும், மஹாராஷ்டிராவில் 3.40 லட்சம் ரூபாயும், ஆந்திர பிரதேச முதல்வருக்கு 3.35 லட்சம் ரூபாயும், மிக குறைந்த சம்பளமாக தெலுங்கானா மற்றும் பெங்கால், நாகலாந்து முதல்வர்களுகு 1.10 லட்சம் ரூபாயும் சம்பளமாக கொடுக்கப்படுகிறது. இது வெறும் பேசிக் பே மட்டும் தான். இது தவிர பல சலுகைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர்களின் சம்பளம் இவ்வளவு... அவ்வளவு என வாயை பிளக்கும் மக்களுக்கு... மக்கள் பிரதிநிதிகள் சம்பளம் எவ்வளவு தெரியுமா..! ஆசிரியர்களின் சம்பளம் இவ்வளவு... அவ்வளவு என வாயை பிளக்கும் மக்களுக்கு... மக்கள் பிரதிநிதிகள் சம்பளம் எவ்வளவு தெரியுமா..! Reviewed by Rajarajan on 7.7.21 Rating: 5

கருத்துகள் இல்லை