Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

பள்ளிகள் செப்டம்பர் மாதத்திற்கு முன்பு மீண்டும் திறக்கப்பட வாய்ப்பில்லை அசாம் அரசு

 

கொரோனா தொற்றுநோய் பரவல் காரணமாக அசாமில் உள்ள பள்ளிகள் செப்டம்பர் மாதத்திற்கு முன்பு மீண்டும் திறக்கப்பட வாய்ப்பில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனாவின் நீண்ட 2வது அலை மற்றும் மூன்றாவது அலை பரவலின் சாத்தியம் போன்றவை பள்ளிகளை தொடர்ந்து மூடுவதற்கான சாத்தியக்கூறுகள் ஆக உள்ளன.


பள்ளிகள் மூடல்:

நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக மாநில வாரியாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. இதனால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் வழியே வகுப்புகள் எடுக்கப்படுகிறது. கடந்த வருட மார்ச் மாதம் தொடங்கி தற்போது வரை பள்ளிகளை மீண்டுமாக முழுவீச்சில் திறப்பதில் சிக்கல்கள் நிலவுகிறது. தற்போது கொரோனா 2வது அலை பாதிப்புகள் சரியத் தொடங்கி உள்ள நிலையில், பீகார் மாநில அரசு 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை தொடங்க அனுமதி அளித்துள்ளது.




இந்நிலையில் அஸ்ஸாமில் மீண்டும் பள்ளிகளை திறப்பது குறித்து இதுவரை சிந்திக்கவில்லை என்று மாநில கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. COVID-19 நிலைமை இன்னும் தீவிரமாக இருப்பதால், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன. கொரோனா நோய்த்தொற்றின் நீண்ட 2வது அலை குறித்து சுகாதாரத் துறை கவலையில் உள்ளது. மேலும் மூன்றாவது அலை குறித்து வல்லுநர்கள் ஏற்கனவே எச்சரித்துள்ளனர். இத்தகைய சூழ்நிலைகளில் பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து கல்வித் துறை எந்த முடிவும் எடுக்க முடியாது என வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.


அனைத்து மாணவர்களுக்கும் ஆன்லைன் வகுப்புகள் தொடர்ச்சியாக கிடைப்பதை உறுதி செய்யுமாறு அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பள்ளிகளின் ஆய்வாளர்களை கல்வித் துறை அறிவுறுத்தி உள்ளது. மேலும் இணைய இணைப்பு சேவைகள் தடையின்றி கிடைக்க பல்வேறு மாவட்டங்களில் மொபைல் டவர்களை நிறுவவும் அரசாங்கம் முடிவு செய்துள்ளது. மறுபுறம், தனியார் பள்ளி நிர்வாகங்கள் கொரோனா நிலைமை முழுமையாக கட்டுப்படுத்தப்படும் வரை மீண்டும் பள்ளிகளை திறக்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளன.

பள்ளிகள் செப்டம்பர் மாதத்திற்கு முன்பு மீண்டும் திறக்கப்பட வாய்ப்பில்லை அசாம் அரசு பள்ளிகள் செப்டம்பர் மாதத்திற்கு முன்பு மீண்டும் திறக்கப்பட வாய்ப்பில்லை அசாம் அரசு  Reviewed by Rajarajan on 5.7.21 Rating: 5

கருத்துகள் இல்லை