நீட் தேர்வு ரத்து செய்ய அமைக்கப்பட்ட ஆய்வுக்குழு எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம்
தமிழகத்தில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க தமிழக அரசு ஆய்வுக்குழு ஒன்றை நியமித்துள்ள நிலையில், அதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
நீதிமன்ற வழக்கு:
மத்திய அரசு நாடு முழுவதும் நீட் தேர்வின் அடிப்படையில் மட்டுமே மருத்துவ படிப்பிற்கான மாணவர் சேர்க்கையை நடத்தும் படி திட்டம் கொண்டுவந்துள்ளது. மத்திய இடைநிலைக் கல்வி வராது அடிப்படையில் மட்டுமே நீட் தேர்வு வினாக்கள் கேட்கப்படும். இதனால், தமிழகத்தில் நீட் தேர்வு நடத்துவதற்கு பல தரப்புகளில் இருந்து எதிர்ப்புகள் உள்ளது. திமுக அரசு ஆட்சி வந்தால் தமிழகத்தில் நீட் தேர்வுகள் ரத்து செய்யப்படும் என்று முன்னரே அறிவித்துள்ளது.
இந்தநிலையில், திமுக அரசு ஆட்சிக்கு வந்ததும், நீட் தேர்வு பாதிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு அறிக்கையை சமர்ப்பிக்க நீதிபதி ராஜன் தலைமையில் 8 பேர் கொண்ட குழு ஒன்றை அமைத்துள்ளது. இந்நிலையில், இந்த குழுவை நீக்க வேண்டும் என்று அரசுக்கு எதிராக பாஜக மாநில பொது செயலாளர் கரு.நாகராஜன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், நீட் தேர்வு பாதிப்பு குறித்து அமைக்கப்பட்ட இந்த குழு உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது அல்ல. பின்தங்கிய மற்றும் அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வினால் பாதிக்கப்ட்டுள்ளதை குறித்து ஆய்வு செய்ய மட்டுமே குழு அமைக்கப்பட்டுள்ளது. மக்கள் கருத்து கேட்பது தொடர்பான அரசின் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறி மனுவினை சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது.
கருத்துகள் இல்லை