Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

பள்ளி பணிகள் தொய்வின்றி நடைபெற ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும்

 


தமிழகத்தில் தற்போது அமலில் உள்ள ஊரடங்கிற்கு அடுத்த கட்ட தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து உள்ளது. அதில் கல்வி நிலையங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. அது குறித்து எங்கள் இணையதளத்தில் விரிவாக அறியலாம்.


கொரோனா ஊரடங்கு :

கொரோனா வைரஸின் பரவலினால் கடந்த ஆண்டு முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் காரணமாக அனைத்து பணிகளும் முடங்கி விட்டது. மேலும் அரசு அலுவலகம் மட்டுமில்லாது அனைத்து துறை செயல்பாடுகளும் நின்று விட்டது. அவற்றோடு பள்ளி மற்றும் கல்லூரிகளும் மூடப்பட்டு இருந்தது. அதன் காரணமாக மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டது




அவற்றோடு தொழில்துறை உட்பட நாட்டின் அனைத்து துறைகளும் முடங்கி விட்டதால் பொருளாதாரமும் பெருமளவு பாதிக்கப்பட்டது. அதன் பின்னர் சிறிது சிறிதாக ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு மக்கள் இயல் வாழ்க்கைக்கு திரும்பினாலும், கொரோனா இரண்டாம் அலையின் காரணமாக மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. நோய்த் தொற்றின் தீவிரத்தில் ஏற்பட்ட குறைவினால் ஊரடங்கில் தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.


தற்போது தமிழகத்தில் உள்ள தளர்வுகளுடன் கூடுதல் தளர்வுகள் அளித்து ஊரடங்கை வரும் 31.07.2021 அன்று வரை தமிழக அரசு நீட்டித்து உள்ளது. அதில் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, பாடப்புத்தகங்கள் விநியோகம் உள்ளிட்ட பணிகள் தொய்வின்றி நடைபெற ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.



மேலும் தொழிற்கல்வி பயிலும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தொழிற்பயிற்சி நிலையங்கள், தட்டச்சு பயிற்சி நிலையங்கள் உள்ளிட்டவற்றை கொரோனா கட்டுப்பாட்டு வழிகாட்டுதல்களுடன் 50% மாணவர்களோடு சுழற்சி முறையில் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பள்ளி பணிகள் தொய்வின்றி நடைபெற ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும் பள்ளி பணிகள் தொய்வின்றி நடைபெற ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும் Reviewed by Rajarajan on 16.7.21 Rating: 5

கருத்துகள் இல்லை