தமிழகத்தில் இ-பதிவு, இ-பாஸ் நடைமுறை ரத்து – ஜூன் 12 வரை ஊரடங்கு நீட்டிப்பு!
தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை வரும் ஜூலை 12ம் தேதி வரை நீட்டித்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார். புதிய தளர்வாக இ-பாஸ் மற்றும் இ-பதிவு நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது,
இ-பாஸ்:
தமிழகத்தில் வரும் ஜூலை 5ம் தேதி காலை 6 மணி முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவுக்கு வரவுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் கூடுதல் தளர்வுகள் அளிப்பது குறித்து இன்று (ஜூலை 2) காலை முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தலைமை செயலகத்தில் முக்கிய ஆலோசனையை மேற்கொண்டார். இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மாநிலத்தில் கூடுதல் தளர்வுகளை அறிவித்து ஊரடங்கு கட்டுப்பாடுகளை வரும் ஜூலை 12ம் தேதி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதன்படி ஜூலை 5 முதல் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே வகையான தளர்வுகள் வழங்கப்படுகிறது. புதிய தளர்வாக பொது போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது, மாநிலத்திற்கு இடையேயான தனியார் மற்றும் அரசு போக்குவரத்திற்கு தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழகத்தில் இ-பாஸ் மற்றும் இ-பதிவு முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. மாவட்டங்களுக்கு இடையே பயணம் மேற்கொள்ள இ-பாஸ் மற்றும் இ-பதிவு முறை தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது தமிழகத்தில் மாவட்டங்களுக்கு உள்ளே மற்றும் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து போக்குவர்த்தத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் இ-பாஸ் மற்றும் இ-பதிவு முறை ரத்து செய்ப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பு அறிவித்திருந்ததை போல் தற்போதும் பேருந்துகள் 50% பயணிகளுடன் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் தளர்வாக தமிழகத்தில் கடைகள் திறப்பு நேரம் இரவு 8 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை