ஜூலை 31 வரை கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு
தமிழகத்தில் குறைந்து கொண்டே வரும் கொரோனா பரவல் காரணமாக ஜூலை 31 வரை கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் கடந்த மே மாதம் முதல் பரவி வரும் காரணமாக கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. அதன் காரணமாக கொரோனா பரவல் குறைந்துள்ளது. இறுதியாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் அனைத்தும் ஜூலை 19 காலை 6 மணி வரை முடிவடைய உள்ள நிலையில் தற்போது ஜூலை 31 வரை கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
தொடரும் தடைகள்:
மாநிலங்களுக்கிடையே தனியார் மற்றும் அரசு பேருந்து போக்குவரத்திற்கு தொடர்ந்து தடை நீடிக்கப்பட்டுள்ளது. (புதுச்சேரி நீங்கலாக)
மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களை தவிர சர்வதேச விமான போக்குவரத்து.
திரையரங்குகள்
அனைத்து மதுக்கூடங்கள்
நீச்சல் குளங்கள்
பொது மக்கள் கலந்து கொள்ளும் சமுதாயம் அரசியல் சார்ந்த கூட்டங்கள்
பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகள்
பள்ளிகள் மற்றும் கல்லூரிகள்
உயிரியல் பூங்காக்கள்
நோய் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக திருமண நிகழ்வுகளில் 50 நபர்கள் மட்டுமே அனுமதி
இறுதி சடங்கில் 20 நபர்கள் மட்டுமே அனுமதி. மேலும் நோய்கட்டுப்பாடு பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் தொடர்ந்து அனுமதிக்கப்படும்.
தொழிற் பயிற்சி பெறும் மாணவர்களின் வேலைவாய்ப்பினைக் கருத்தில் கொண்டு அனைத்து தொழிற்பயிற்சி நிலையங்கள் தட்டச்சு- சுருக்கெழுத்து பயிற்சி நிலையங்கள் ஒரு நேரத்தில் 50 சதவிகித மாணவர்களுடன், சுழற்சி முறையில் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படுகின்றன.
மேலும், பள்ளிகளில், மாணவர்கள் சேர்க்கை, புத்தக விநியோகம், பாடத்திட்ட தயாரிப்பு உள்ளிட்ட அனைத்து நிர்வாகப் பணிகளும் தொய்வின்றி நடைபெறுவதற்காக ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து பணிபுரிய அனுமதிக்கப்படுகிறார்கள்
பொது அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து கடைகள் மற்றும் பொது மக்கள் கூடக்கூடிய இடங்களில் பின்வரும் முக்கிய நிலையான வழிகாட்டு நடைமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்.
கருத்துகள் இல்லை