மத்திய அரசு ஊழியர்களின் குழந்தை கல்வி செலவுத் தொகை கோருவதற்கான விதிகளில் தளர்வு..!
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி அதிகரிப்பு செப்டம்பர் வரை காத்திருக்கும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், பணியாளர் மற்றும் பயிற்சி துறை (DOPT) மூலமாக நிவாரணம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு அறிவிப்பு:
கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்கப்படவில்லை. மேலும் அவர்களுக்கு வழங்கப்படாத அகவிலைப்படி உயர்த்தி வருகிற செப்டம்பர் மாதம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பணியாளர் மற்றும் பயிற்சி துறை மூலமாக மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய நிவாரணம் ஒன்று வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் குழந்தை கல்வி கொடுப்பனவு கோருவதற்கான விதிகளில் தளர்வுகள் வழங்கப்பட உள்ளன. சிஇஏ விண்ணப்பிக்க ஊழியர்கள் சான்றிதழிகளை நிர்ணயிக்கப்பட்ட முறைகளை தவிர முடிவுகள்/ ரிப்போர்ட் கார்டு/ கட்டணம் செலுத்திய மின்னஞ்சல்/ எஸ். எம்.எஸ் ஆகியவற்றின் பிரிண்ட் அவுட் மூலமாக விண்ணப்பிக்கலாம். கொரோனா காரணமாக மக்கள் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே CEA திட்டம் மூலமாக 7வது பரிந்துரைப்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு CEA மூலமாக மாதம் ரூ.2250 வழங்கப்படுகிறது. ஆனால் கொரோனா காரணமாக CEA பெறுவதில் ஊழியர்கள் சிரமம் அடைகின்றனர். இந்த சிக்கலை போக்கவே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 7வது ஊதியக்குழு ஊழியர்களுக்கு மாதம் ரூ.2250 CEA வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளது. ஒரு மாதத்திற்கு விடுதி மானியத்திற்கு பரிந்துரைக்கப்பட்ட விகிதம் ரூ.6750 ஆகும். அகவிலைப்படி 50 சதவிகிதம் உயர்ந்ததாக CEA விடுதி மானியமும் 25 சதவிகிதமும் அதிகரிக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை