தமிழகத்தில் பள்ளிகள் திறக்க அரசு அனுமதிக்க வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை - தனியார் பள்ளிகள் சங்கம்
தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக கடந்த கல்வி ஆண்டு முழுவதும் பள்ளிகள் திறக்கப்படவில்லை. மாணவர்கள் ஆன்லைன் முறையில் மட்டுமே பாடங்களை கற்றனர். தற்போது இரண்டாம் அலையின் தாக்கம் குறைந்து அரசு பல்வேறு தளர்வுகளையும் அறிவித்து வருகிறது. இருப்பினும், கல்வி நிலையங்கள் மற்றும் திரையரங்குகள் போன்றவை தொடர்ந்து இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக தனியார் பள்ளிகளின் ஏழு சங்கத்தினர் இணைந்து தமிழகத்தில் பள்ளிகள் திறக்க அரசு அனுமதிக்க வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
தனியார் பள்ளி சங்கத்தினர் நேற்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், ஆணையர் நந்தகுமார் ஆகியோரிடம் நேரில் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில், மாணவர்களிடம் TC இல்லாமல் வேறு பள்ளிகள் சேர்க்கை நடத்தக்கூடாது. எமிஸ் எண்ணை வைத்து மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது. கல்வி கட்டணம் முறைப்படுத்துதல் போன்ற கோரிக்கைகளை தெரிவித்தனர்.
TN Job “FB
Group” Join Now
மேலும், விரைவில் வல்லுநர் குழு மூலம் உரிய வழிகாட்டுதல் விதிமுறைகளுடன் பள்ளிகளை திறக்கவும், நேரடி வகுப்புகள் நடத்தவும் அனுமதிக்க வேண்டும். பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குதல், பாடத்திட்டம் சீர்திருத்தம், 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் கட்டமாக நேரடி வகுப்புகளை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கைகள் குறித்து அரசு விரைவில் நடவடிக்கை எடுக்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை