தமிழகத்தில் ஆகஸ்ட் 20ம் தேதிக்கு பின்னர் பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்பு
தமிழகத்தில் ஆகஸ்ட் 20ம் தேதிக்கு பின்னர் முதற்கட்டமாக 9 முதல் 12ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்புள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து குறித்து சுதந்திர தின விழாவில் அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த வருடம் மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் அரசு பள்ளிகளில் கல்வி தொலைக்காட்சிகள் மூலமாகவும், தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் மூலமாகவும் பாடங்கள் எடுக்கப்பட்டு வருகிறது. 2021-22 ம் ஆண்டிற்கான புதிய கல்வியாண்டு தொடங்கிய போதிலும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளது. ஆன்லைன் கல்வி பாடங்கள் புரிவதில்லை என மாணவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
12ம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு மதிப்பீட்டு முறையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. மேலும் மூன்றாம் அலை கொரோனா பரவல் வரும் என்ற அச்சத்தாலும் பள்ளிகள் திறப்பு கேள்விக் குறியாக உள்ளது. கொரோனா இரண்டாம் அலை சற்று குறைந்து வருவதால் இந்தியாவில் குஜராத், மத்தியப் பிரதேசம் , ஒடிசா போன்ற வட மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
மற்ற மாநிலங்களை தொடர்ந்து தமிழகத்திலும் மீண்டும் பள்ளிகள் திறப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை கலந்தாலோசித்து வருகிறது. இது குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தமிழகத்தில் ஆகஸ்ட் 20ம் தேதிக்கு பின்னர் முதற்கட்டமாக 9 முதல் 12ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து முதல்வர் சுதந்திர தின விழாவில் அறிவிப்பு வெளியிடுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது
கருத்துகள் இல்லை