டெல்டா வைரஸ் எச்சரிக்கை, 104 நாடுகளுக்கு பரவியுள்ளது என WHO அறிக்கை
சீனாவிலிருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இதனால் ஏராளமான மக்கள் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக வயதானவர்கள் அதிகம் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர் . நாடுகள் அனைத்தும் நோய் தொற்றை குறைக்க தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக நாடுகள் தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டது. இதன் விளைவாக தடுப்பூசிகள் ஆய்வுக்கு பிறகு மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. ஓரளவு மக்கள் ஆறுதல் அடையும் நிலையில் டெல்டா வைரஸ் இந்தியாவில் இருந்து உருவாகி பரவ தொடங்கியுள்ளது.
பல்வேறு நாடுகளில் கொரோனா வெவ்வேறு வகையில் உருமாற்றம் அடைந்துள்ளது. அவற்றை ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா என பெயரிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். அதில் ஒன்றான டெல்டா வைரஸ் தற்போது உலகில் 104 நாடுகளுக்கு பரவி பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் உருவான டெல்டா வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவும் தன்மை கொண்டது. என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதோனம் தெரிவித்துள்ளார்.
மேலும் இதன் காரணமாக மீண்டும் உயிரிழப்புகள் ஏற்பட தொடங்கியுள்ளது. அதானல் அனைத்து நாட்டு அரசுகளும் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். டெல்டா வைரஸ் பாதிப்பிலிருந்து காக்க தடுப்பூசி செலுத்தும் பணியை துரிதப்படுத்த வேண்டும் என தலைவர் டெட்ரோஸ் அதோனம் தெரிவித்துள்ளார். மேலும் அண்மை காலமாக உயிரிழப்புகள் அதிகரிக்க டெல்டா வைரஸ் தான் காரணம் எனவும் கொரோனா பெருந்தொற்று இன்னும் முடியவில்லை என்பதை கருத்தில் கொண்டு மக்கள் அலட்சியம் காட்டாமல் தடுப்பூசிகளை செலுத்தி கொள்ள வேண்டும். இல்லை எனில் மிக மோசமான சூழலை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரித்துள்ளார்.
கருத்துகள் இல்லை