ஆகஸ்ட் 9ம் தேதி முதல் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட இருப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர்
தமிழகத்தில் இளங்கலை மாணவர்களுக்கான பொறியியல் மற்றும் கலை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், வரும் ஆகஸ்ட் 9ம் தேதி முதல் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட இருப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் கொரோனா தொற்று பரவல் உள்ளது. இது அதிவேகத்தில் பரவும் தொற்று வகையை சேர்ந்ததால் நோய் தடுப்பு நடவடிக்கையாக மாநிலத்தில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டது. இதனால் பல கல்லூரிகளில் இறுதி பருவ தேர்வுகள் ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டது.
தொடர்ந்து தொற்று பாதிப்பு காரணங்களினால் கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டது. தற்போது12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வெளியிடப்பட்டு தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் நடந்து வருகின்றது. இந்நிலையில், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் சென்னை தலைமை செயலகத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில், பொறியியல், கலைக்கல்லூரிகளில் ஆகஸ்ட் 9ம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்படும் என்றும் கல்லூரிகளை திறப்பது குறித்து முதல்வர் முடிவெடுப்பார். தனியார் கல்லூரிகளில் கொரோனா காரணமாக 75% மட்டுமே கட்டணம் வசூலிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொறியியல் மாணவர்கள், அனைத்து பாடத்திலும் அரியர் இருந்தால் அவர்கள் அனைத்திலும் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அடுத்த வருடம் படிக்க முடியும் என்று இருந்த நடைமுறை மாற்றப்படும் என்றும் அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை