Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

தமிழக போக்குவரத்து ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த கேட்டுள்ள முன்மொழிவு உத்தரவு வாபஸ் தமிழக அரசு!



தமிழக போக்குவரத்து துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த, அரசு கேட்டுள்ள முன்மொழிவு உத்தரவை திரும்ப பெறுவதாக மாநில போக்குவரத்து கழக ஊழியர் அறக்கட்டளைக்கு அரசு சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.


தமிழகத்தில் கடந்த 1998 ஆம் ஆண்டு முதல் போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்த திட்டமானது கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் பணியமர்த்தப்பட்டவர்களுக்கு மாற்றியமைக்கப்பட்டு, புதிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து போக்குவரத்து கழக ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் எனவும், போனஸ், ஊதிய உயர்வு, ஓய்வூதிய நிலுவைத் தொகை போன்றவற்றை அரசு திரும்ப கொடுக்க வேண்டும் என பல கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.




இந்நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தலின் போது திமுக ஆட்சிக்கு வந்தால், போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என அறிவித்தது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் தற்போது ஆட்சியமைத்துள்ள முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான அரசு, போக்குவரத்து ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியானது.


மேலும் இத்திட்டத்தால் பலனடையும் ஊழியர்கள் மற்றும் அதற்குண்டான செலவின விவரங்களை அனுப்பி வைக்கும்படி தமிழக அரசு தெரிவித்தது. இந்த தகவலால் மகிழ்ச்சியுற்றிருந்த போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு மீண்டுமாக ஒரு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதாவது 1998 ஆம் ஆண்டு முதல் அமலில் உள்ள பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டுமாக அமல்படுத்துவது தொடர்பாக அனுப்பப்பட்ட ஆணையை திரும்ப பெறுவதாக மாநில போக்குவரத்து கழக ஊழியர் அறக்கட்டளைக்கு, தமிழக அரசு கடிதம் அனுப்பியுள்ளது.

தமிழக போக்குவரத்து ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த கேட்டுள்ள முன்மொழிவு உத்தரவு வாபஸ் தமிழக அரசு! தமிழக போக்குவரத்து ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த கேட்டுள்ள முன்மொழிவு உத்தரவு வாபஸ் தமிழக அரசு! Reviewed by Rajarajan on 18.7.21 Rating: 5

கருத்துகள் இல்லை