M.Phil பட்டப்படிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், M.Phil படிப்புகள் தொடர்ந்து நடத்தப்படும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தகவல்
சென்னை பல்கலையில் M.Phil பட்டப்படிப்பு துவக்கம் – உயர் கல்வித்துறை அமைச்சர் தகவல்!
சென்னை பல்கலைக்கழகத்தில் M.Phil பட்டப்படிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், வரும் நாட்களில் M.Phil படிப்புகள் தொடர்ந்து நடத்தப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள 13 பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்களுடன் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் இன்று (ஜூலை 1) ஆலோசனை மேற்கொண்டார். அதாவது தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள், அலுவலக பணியாளர் பணியிடங்களை நிரப்புவது பற்றியும், செமஸ்டர் தேர்வுகள் குறித்தும் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பல்கலை துணைவேந்தர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இதற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ‘தமிழகத்தில் ஆகஸ்ட் 1 ஆம் தேதிக்கு மேல் அனைத்து கல்லூரிகளிலும் புதிய மாணவர் சேர்க்கைகளை வெளிப்படைத்தன்மையுடன் நடத்த வேண்டும். மேலும் M.Phil பட்டப்படிப்பை சென்னை பல்கலைக்கழகம் ரத்து செய்துள்ள நிலையில், இந்த படிப்புகள் மீண்டும் துவங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களிலும் M.Phil படிப்பை தொடர வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தவர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது’ என தெரிவித்துள்ளார். அந்த வகையில் வரும் கல்வியாண்டில் சென்னை பல்கலைக்கழகத்தில் M.Phil படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
M.Phil பட்டப்படிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், M.Phil படிப்புகள் தொடர்ந்து நடத்தப்படும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தகவல்
Reviewed by Rajarajan
on
1.7.21
Rating:
கருத்துகள் இல்லை