RTI மூலம் தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீட்டில் இலவசமாக மாணவர் சேர்க்கைக்கு ஆகஸ்ட் 3 வரை மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்..!
தமிழகத்தில் 2021-22 ஆம் கல்வியாண்டு கடந்த ஜூன் 14 முதல் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆண்டுதோறும் ஏழை எளிய மாணவர்களுக்கு இலவச கல்வி உரிமை சட்டத்தின் கீழ் மாவட்டம் தோறும் உள்ள அனைத்து சிறுபான்மையின தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீட்டில் இலவசமாக மாணவர் சேர்க்கை வழங்கப்படும். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை வழங்க ஜூலை 5 முதல் ஆகஸ்ட் 3 வரை இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் மொத்தம் 179 மெட்ரிக் பள்ளிகள், 192 நர்சரி பள்ளிகள், பிரைமரி பள்ளிகள் என மொத்தமாக 371 பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வழங்கப்படுகிறது. இதில் மெட்ரிக் பள்ளிகளில் 2,646 இடங்கள், நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளில் 1905 இடங்கள் என மொத்தம் 4551 இடங்களுக்கான விண்ணப்ப பதிவு ஆன்லைன் மூலமாக தொடங்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் மூலமாக 5 விதமான சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் சேர்க்கை வழங்கப்படுகிறது. அதன்படி, மாற்றுத்திறனாளி குழந்தைகள், மாற்று பாலின குழந்தைகள், ஆதரவற்ற குழந்தைகள், எச்.ஐ.வி யால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரிந்து வரும் சுகாதார பணியாளர்களின் குழந்தைகள் ஆகியோர் குலுக்கல் இன்றி முன்னுரிமை அடிப்படையில் சேர்க்கை வழங்கப்படுகிறது. எனவே விருப்பமுள்ளவர்கள் ஆகஸ்ட் 3 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை