குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில் விருப்பம் இல்லை, 32% பெற்றோர்கள் கருத்து
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் வரை பெற்றோர்களுக்கு குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில் விருப்பம் இல்லை என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றது. மேலும் 32% பெற்றோர்கள் மட்டுமே பள்ளிக்கு அனுப்ப விருப்பம் தெரிவித்துள்ளனர் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று கடந்த ஆண்டு முதல் தீவிரமாக பரவி அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டன. வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது. தற்போது நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவுவதால் இந்த கல்வியாண்டிலும் பள்ளிகள் திறக்கப்பட முடியாத சூழல் உருவாகியுள்ளது. மற்றொரு புறம் கொரோனா பயன்பாட்டிற்கு வந்து அதை செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தொற்று பரவல் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் குறைந்து வருகிறது.
இந்த சூழலில் மீண்டும் பள்ளிகளை திறப்பது குறித்து அனைத்து மாநிலங்களும் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து வருகிறது. சில மாநிலங்களில் மேல்நிலை வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகளும் நடைபெற்று வருகிறது. அடுத்த கட்டமாக நடுநிலை மற்றும் ஆரம்ப நிலை வகுப்புகளையும் திறக்க ஏற்பாடுகளை செய்து வருகிறது. மேலும் மூன்றாம் அலை கொரோனா வரும், அது குழந்தைகளை தாக்கும் என்ற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கான தடுப்பூசிகள் இன்னும் பயன்பாட்டிற்கு வரவில்லை இறுதி கட்ட பரிசோதனையில் தான் உள்ளது. கொரோனா பரவல் முழுமையாக குறையாத இந்த நேரத்தில் தடுப்பூசி செலுத்தாமல் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில் 48 சதவிகித பெற்றோர்களுக்கு விருப்பம் இல்லை என ஆய்வுகள் தெரிவிக்கிறது. மேலும் 32% பெற்றோர்கள் மட்டுமே பள்ளிகளுக்கு அனுப்ப விருப்பம் தெரிவித்துள்ளனர் எனவும் ஆய்வுகள் கூறுகிறது. இதனால் பள்ளிகள் திறப்பு குறித்து குழப்பமான சூழ்நிலை நிலவுகிறது.
கருத்துகள் இல்லை