Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

விடுபட்ட மாணவர்களுக்கான தேர்வை நடத்தி முடித்த பின்னரே,பிளஸ் 2, 'ரிசல்ட்'




தமிழகத்தில்பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடுஇப்போதைக்கு இல்லைஎனதிட்டவட்டமாக அறிவிக்கப்பட்டு உள்ளதுபள்ளிகள் திறப்பு குறித்துஎந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும்தொற்று பரவல் குறைந்த பின்மருத்துவ நிபுணர்கள் மற்றும் முதல்வருடன் கலந்து ஆலோசித்த பிறகேஇவ்விஷயத்தில் முடிவெடுக்கப்படும் என்றும்பள்ளி கல்வித்துறை அமைச்சர்செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில்பிளஸ் 2 தேர்வுகள்மார்ச், 24ல் முடிவடைந்தனஇந்த தேர்வை, 8.5 லட்சம் பேர் எழுதினர்கொரோனா பரவலை தடுக்கமார்ச்,24ல்திடீரென ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால்அன்று நடந்த தேர்வில் மட்டும், 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்கவில்லை.ஆனாலும்மாணவர்களின் விடைத்தாள்களை திருத்தும் பணிமே, 27ல் துவங்கியதுஜூன் இரண்டாவது வாரத்தில் விடைத்தாள்கள் திருத்தம் முடிந்தது.

'ரிசல்ட்தயார் இதையடுத்துபாடவாரியாக மாணவர்களின் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டுதேர்வு மையம் வாரியாகஇறுதி பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதுமாநில அளவிலும்மாணவர்களின் மதிப்பெண் பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில்தேர்வு முடிவை வெளியிடுவதற்கான ஆயத்த பணிகள் துவங்கினவரும், 6ம் தேதி தேர்வு முடிவை வெளியிடலாம் எனபள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தரப்பில்அரசுக்கு அறிக்கை அளிக்கப்பட்டது.

'மார்ச்,24ம் தேதி தேர்வில் பங்கேற்காத மாணவர்களுக்குஅவர்கள் தேர்வு எழுதிய பாடங்களுக்கு மட்டும்முடிவுகள் வெளியிடலாம்மற்ற மாணவர்களுக்குஅனைத்து பாடங்களுக்கும் முடிவை அறிவிக்கலாம்எனதேர்வுத் துறை அதிகாரிகள் ஆலோசனை தெரிவித்திருந்தனர்ஆனால்,அதை ஏற்கபள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் மறுத்து விட்டார்விடுபட்ட மாணவர்களுக்கான தேர்வை நடத்தி முடித்த பின்னரே,பிளஸ் 2, 'ரிசல்ட்வெளியிடப்படும் எனதிட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாகஈரோடு மாவட்டம்நம்பியூரில்அவர் அளித்தபேட்டி:'ஆன்லைன்வகுப்பு குறித்துநீதிமன்றத்தில் வழக்கு உள்ளதுநீதிபதிகள்துறை ரீதியாக சில விளக்கங்கள் கேட்டுள்ளனர்நீதிமன்றம் என்ன உத்தரவு பிறப்பிக்கிறதோஅதன்படி நடவடிக்கை எடுக்கப்படும்.பிளஸ் 2 தேர்வு முடிவுகளை பொறுத்தவரைசில சிக்கல்கள் உள்ளனமார்ச், 24ம் தேதி நடந்த பாடத் தேர்வில், 34 ஆயிரத்து, 682 பேர் பங்கேற்கவில்லைஅவர்களில் தற்போது, 718 பேர் மட்டுமேதேர்வு எழுத விருப்பம் தெரிவித்துள்ளனர்.இவர்களுக்குஎப்போது தேர்வு நடத்தலாம் என்பது குறித்துமுதல்வருடன் கலந்து பேசி முடிவு செய்யப்படும்அதன்பின் தான்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிக்கப்படும்.

தமிழகத்தில்தற்போதைய கொரோனா பரவல் சூழல்நமக்கு சாதகமாக இல்லைபள்ளிகளை எப்போது திறக்கலாம் என்பதைநம்மால் யோசிக்க இயலாதுஇயல்பு நிலை திரும்பிய பின்மருத்துவ குழுவருவாய் துறைபள்ளி கல்வித் துறையினர் ஆலோசித்துமுதல்வர் தலைமையிலான கமிட்டியில் முடிவு செய்யப்பட்டுபள்ளி திறப்பு குறித்துமுடிவு எடுக்கப்படும்.இவ்வாறுஅவர் கூறினார்.
பெற்றோர் அதிருப்தி
பிளஸ் 2 தேர்வை, 8.5 லட்சம் பேர் எழுதிய நிலையில்ஒரு பாடத்தில் மட்டும் தேர்வு எழுதாத மாணவர்களுக்காகஒட்டு மொத்தமாக முடிவு வெளியீட்டை நிறுத்தி வைப்பதா என,பெற்றோரும்ஆசிரியர்களும் கேள்வி எழுப்புகின்றனர்.

இதுகுறித்துஆசிரியர்கள் கூறியதாவது:
மாணவர்கள் எந்தெந்த பாடங்களுக்கு தேர்வு எழுதியுள்ளார்களோஅதற்கு மட்டும் முடிவை அறிவிப்பதில் எந்த பிரச்னையும் இல்லைமுடிவை விரைவாக அறிவித்தால்மாணவர்கள் தங்கள் மதிப்பெண்ணை தெரிந்துஅதன் அடிப்படையில்உயர் கல்வியில் சேர்வது குறித்துமுடிவு எடுக்க அவகாசம் கிடைக்கும்.மாறாகதேர்வு முடிவை தாமதப்படுத்தினால்அவசர அவசரமாக உயர் கல்வி குறித்து முடிவு எடுக்க வேண்டிய நிலை ஏற்படும்இவ்வாறு அவர்கள் கூறினர்
விடுபட்ட மாணவர்களுக்கான தேர்வை நடத்தி முடித்த பின்னரே,பிளஸ் 2, 'ரிசல்ட்' விடுபட்ட மாணவர்களுக்கான தேர்வை நடத்தி முடித்த பின்னரே,பிளஸ் 2, 'ரிசல்ட்' Reviewed by Rajarajan on 3.7.20 Rating: 5

கருத்துகள் இல்லை