அழுக்கடைந்த மற்றும் கிழிந்த ரூபாய் நோட்டுக்களை மாற்றுவது எப்படி?
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வங்கியும், கிழிந்த, அழுக்கடைந்த மற்றும் பயன்படுத்த முடியாத ரூபாய் நோட்டுக்களை வாடிக்கையாளர்களிடமிருந்து பெற்றுக் கொண்டு அதற்கு ஈடாகப் புதிய நோட்டுக்களை வழங்க வேண்டும் என இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. எனவே அருகில் உள்ள வங்கிக்குச் சென்று உங்களுடைய ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ளலாம். இதற்காக எவ்விதக் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. நீங்கள் வங்கியின் வாடிக்கையாளராக இருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்தியாவில் உள்ள எந்த வங்கியிலும் கிழிந்த ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ளலாம்.
*உங்களுடைய கட்டணங்களைச் செலுத்தலாம்*
இது போன்ற ரூபாய் நோட்டுக்களை வங்கியின் மூலமாக ஏதாவது கட்டணம் செலுத்த பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது பலருக்குத் தெரியாது.
*வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யலாம்*
இது போன்ற பயன்படுத்த முடியாத ரூபாய் நோட்டுக்களை உங்களுடைய வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யலாம். வங்கிகள் இந்த நோட்டுக்களைப் பெற்றுக் கொள்ளும். ஆனால் அதே நோட்டுக்களை மீண்டும் வாடிக்கையாளர்களுக்கு வழங்க ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது.
*பணமற்று மற்றும் சேமிப்பு வசதி இல்லாத வங்கிகளில் (non-chest banks) 30 நாட்களில் மாற்றிக் கொள்ளலாம்.*
ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளின் படி பணம் சேமிப்பு மற்றும் மாற்று வசதிகள் இல்லாத வங்கிகளில் (non-chest banks) கிழிந்த மற்றும் அழுக்கடைந்த நோட்டுக்களை மாற்ற வேண்டும் என்றால், அவற்றை அந்த வங்கியில் டெபாசிட் செய்து ஒரு ரசீதைப் பெற்றுக் கொள்ள வேண்டும். பிறகு 30 நாட்களுக்குள் ரசீதைக் காண்பித்துப் பணம் பெற்றுக் கொள்ளலாம்.
*மாற்றமுடியாத ரூபாய் நோட்டுக்கள்*
சில சூழ்நிலைகளில் ரூபாய் நோட்டுக்களை வங்கியில் மாற்ற முடியாது. மடிந்து நொறுங்கிப் போன ரூபாய் நோட்டுக்கள், எரிந்து சிதைந்து போன ரூபாய் நோட்டுக்கள் போன்றவற்றை வங்கிகள் ஏற்றுக் கொள்ளாது. ஏதேனும் வாசகங்கள் எழுதப்பட்ட ரூபாய் நோட்டுக்கள், அரசியல் கட்சிகளின் கோரிக்கைகள் அல்லது கொள்கைகள் எழுதப்பட்ட ரூபாய் நோட்டுக்கள், சட்டப்படி பறிமுதல் செய்யக் கூடிய நோட்டுக்கள் ஆகியவற்றை வங்கிகளில் மாற்றவோ அல்லது டெபாசிட் செய்யவோ முடியாது.
*வேண்டுமென்றே கிழிக்கப்பட்ட அல்லது சிதைக்கப்பட்ட ரூபாய் நோட்டுக்கள்*
அழுக்கடைந்த மற்றும் கிழிந்த ரூபாய் நோட்டுக்களை மாற்றுவது எப்படி?
Reviewed by Rajarajan
on
3.7.20
Rating:
கருத்துகள் இல்லை