Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

இந்திய ராணுவ துறையில் வேலைவாய்ப்பு ,45 ஆயிரம் பணியிடங்கள்

 வேலுார் மாவட்டத்தில் இந்திய ராணுவ துறையில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.இந்த பணியிடங்களுக்கு, தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், தெலங்கானா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வேலைவாய்ப்பு முகாமில், தகுதி, ஆர்வமுள்ள இளைஞர்கள் பங்கேற்கலாம்.வேலுார் மாவட்டத்தில் ராணுவ வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.


வேலூர் மாவட்ட விளையாட்டு மையத்தில் (District Sports Complex) நவ.15ம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை, அக்னிவீர் (ஆண்) (Agniveer (Men), அக்னிவீர் (பெண்கள் ராணுவ காவல் துறை ) (Agniveer (Women Military Police)), பாதுகாப்பு படை வீரர் பிரிவு செவிலியர் (Soldier Technical Nursing Assistant), கால்நடை துறையில் உதவி செவிலியர் (Nursing Assistant (Veterinary)), ஜூனியர் கமிசன்ட் அலுவலர் (Junior Commissioned Officer) மற்றும் Religious Teacher உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை, ராணுவ துறை வெளியிட்டுள்ளது. முகாமிற்கு வருபவர்கள் தேவையான அனைத்து கல்வி சான்றிதழ்களை கொண்டு வரவேண்டும்.


திட்டத்தின்கீழ் சேரும் வீரர்கள் மொத்தம் 4 ஆண்டுகள் முப்படைகளில் பணியாற்றுவர்.


அக்னிபத் திட்டத்தில் இணைபவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். பின்னர் 4 ஆண்டுகளுக்கு அக்னி வீரர்கள் பணியாற்றுவர்.4 ஆண்டுகால சேவைக்குப் பிறகு, பணிக்கால செயல்திறன் அடிப்படையில், அதிகபட்சமாக 25% பேர் இந்திய ராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவர். இந்த திட்டத்தில் மாதந்தோறும் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை ஊதியம் அளிக்கப்படும். அக்னி பாத் திட்டத்தில் இந்தியா முழுவதும் அனைத்து வகுப்புகளிலும் இருந்து 46 ஆயிரம் வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.


கூடுதல் தகவல்களுக்கு www.joinindianarmy.nic.in. என்ற  இணையதளம் வாயிலாக அறியலாம்.


Read more about this Job opening s 


இந்திய ராணுவ துறையில் வேலைவாய்ப்பு ,45 ஆயிரம் பணியிடங்கள் இந்திய ராணுவ துறையில் வேலைவாய்ப்பு ,45 ஆயிரம் பணியிடங்கள் Reviewed by Rajarajan on 5.11.22 Rating: 5

கருத்துகள் இல்லை