தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் மத்திய அரசுக்கு இணையான அகவிலைப்படி – கோரி தர்ணா போராட்டம்
தமிழகத்தில் கடந்த 2004ம் ஆண்டு முதல் புதிய ஓய்வூதிய திட்டம் அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த கோரி பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தேர்தலுக்கு முன் திமுக தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என அறிவித்தது. ஆனால் ஆட்சி அமைத்தது இரண்டு ஆண்டுகள் நெருங்கும் நிலையில் திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் சங்கத்தின் தலைவர் முன்னிலையில் ஆலோசனை கூட்டம் நாமக்கல்லில் நடந்தது. அந்த கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதில், அரசு பணியில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் தற்காலிக ஊழியர்களுக்கு அரசு வழங்கும் ஊதியம் குறித்து வரன்முறை செய்ய வேண்டும் என்றும், புதிய ஓய்வூய்திய திட்டத்தை விரைவில் அமல்படுத்த வேண்டும் என்றும், தமிழகத்தில் உள்ள 4 லட்சம் அரசு துறை காலியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும் என்றும், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான அகவிலைப்படியை வழங்க வேண்டும் என்றும், தமிழக அரசின் நிர்வாக கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் தர்ணா போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்துள்ளனர். இந்த போராட்டம் டிசம்பர் 23ம் தேதி 7 மணடலங்களில் கவன ஈர்ப்பு தர்ணா போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை