பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த இந்த மாநில அரசு முடிவு
இந்தியா முழுமைக்கும் கடந்த 2004ம் ஆண்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து CPS எனப்படும் பங்களிப்பு பென்சன் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இதனை தொடர்ந்து மாநில அரசுகளும் பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து புதிய ஓய்வூதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
ஆனால் இந்தியா முழுமைக்கும் இந்த திட்டத்திற்கு எதிராக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு போராடி வருகின்றனர். தமிழகத்திலும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்துக் கொண்டே இருக்கின்றனர். திமுக அரசும் அதன் வாக்குறுதியில் பழைய ஓய்வூதிய திட்டம் ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தப்படும் என கூறியிருந்தனர் ஆனால் இன்றுவரை அந்த திட்டத்தை பற்றி எந்த விதமான அறிவிப்பும் வெளியிடாமல் காலம் தாழ்த்தி வருகிறது எதற்கு அரசு ஊழியர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு நிலை வருகிறது.
இந்நிலையில் சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநிலத்தில் நீண்ட நாட்கள் போராட்டத்திற்கு பிறகு அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதே போல் பஞ்சாப் மாநில அரசு ஊழியர்களும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்திற்கு பிறகு அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துவது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி பஞ்சாப் மாநிலத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வந்தால் ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கருக்கு அடுத்தபடியாக 3வது மாநிலமாக இம்மாநிலம் திகழும் என கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை