பழைய ஓய்வூதிய திட்டம்; அரசின் தாமதம் நியாயமல்ல!
பழைய ஓய்வூதிய திட்டம்; அரசின் தாமதம் நியாயமல்ல! பழைய ஓய்வூதியத் திட்டம் தான் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு நிறைவான ஓய்வூதியத்தை வழங்கி வந்தது. அத்திட்டத்தை நிறுத்திவிட்டு, அதற்கு மாற்றாக அரசு அறிமுகப்படுத்திய புதிய ஓய்வூதியத்திட்டம், ஊழியர்களிடம் ஓய்வூதியத்திற்காக பங்களிப்பைக் கோருகிறது. தவிர ஓய்வூதியமும் சொர்ப்பமாக உள்ளது. இந்தப் புதிய ஓய்வூதிய திட்டம் 2003 டிசம்பரில் அறிவிக்கப்பட்டு, 2004 ஏப்ரல் 1-ஆம் தேதி தொடங்கப்பட்டது. ஆண்டு தோறும் மத்திய, மாநில அரசுகளால் அரசு ஊழியர் ஓய்வூதியத்திற்குரு.65ஆயிரம் கோடி செலவிடப்படுவதாகவும், இத்தொகை ஆண்டுதோறும் 20 சதவீதம் உயரும் என்றும் 2003-40 கூறப்பட்டது. இதனை குறைப்பதன் மூலம் வளர்ச்சித் திட்டங்களுக்கு அத்தொகையை பயன்படுத்த முடியும். என்றும் தெரிவிக்கப்பட்டது.
முதலில் இத்திட்டத்தை மத்திய அரசு தனது புதிய ஊழியர்களிடம் அறிமுகப்படுத்தியது. பிறகு மாநில அரசுகளும் தொடர்ந்தன. மேற்கு வங்க மாநிலம் மட்டும். இதை ஏற்காமல் பழைய ஓய்வூதிய திட்டத்தையே தொடர்ந்தது. இத்திட்டத்திற்கு அரசு ஊழியர்களிடையே இயல்பாகவே எதிர்ப்பு இருந்தது. புதிய ஓய்வூதிய திட்டம் உடனடியாக ஊழியர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. குறிப்பாக 2004 ஜனவரி 1-ஆம் தேதிக்குப் பிறகு அரசுப் பணியில் சேர்ந்தவர்கள் ஓய்வு பெறும்போதுதான் இதன் பாதிப்பு முழுமையாக புலப்படும். பழைய ஓய்வூதிய திட்டத்தையே மீண்டும் நடைமுறைப்படுத்தக் கோரி அரசு ஊழியர்கள் தற்போது போராடி வருகின்றனர். ஏற்கனவே ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாறி விட்டன.
டெல்லி, பஞ்சாப் மாநிலங்களும் இதே முடிவை மேற்கொள்ளப்போவதாக அறிவித்துள்ளன. ஆந்திரப்பிரதேசம், தமிழகம் உள்ளிட்ட வேறு சில மாநிலங்களிலும்அரசு ஊழியர்கள்போராடிவருகின்றனர். இந்தியாவில் 34.65 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 1.06 கோடி மாநில அரசுகளின் ஊழியர்களும் உள்ளனர். இவர்களில் 2004-க்குப் பிறகு பணியில் சேர்ந்தோரின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும். அவர்களை மட்டுமேபுதியஓய்வூதியதிட்டம்பாதிக்கும்.ஒட்டுமொத்த வேலைவாய்ப்பில் புதிய ஓய்வூதியம் பெறுவோரின் எண்ணிக்கை குறைவாக இருக்கலாம். ஆனால் அரசு தளது முடியாது. சமூகப் பொறுப்புனர்வைத் தட்டிப்பறிக்க
சமமான பணிக்கு சமமான ஊதியம் என்ற நிலையை தொழிலாளர்களிடம் நிலைநாட்ட வேண்டிய பொறுப்புள்ள அரசுக்கு தொழிலாளர்கள் கவுரவமான
ஊதியம், ஓய்வூதியம் ஆகியவற்றைப் பெறுவதை உறுதிப்படுத்தும் கடமையும் இருக்கிறது, 50 வயதுக்கு
மேற்பட்ட மூத்த குடிமக்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. 2021-ல் இந்த எண்ணிக்கை 13.8 கோடியாக உள்ளது. இது 2026-ல் 17:3 கோடியாக அதிகரிக்கும் என்று மதிப்பிட்டுள்ளது. சார்ந்திருப்போரின் மக்கள் தொகை நிதியமைப்பு முதுமை. காரணமாக எண்ணிக்கை 2033-ல் பிறரை 20:1 சதவீதமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலை முதியோர்களுக்கு அரசு கவனம் அளிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. ஆனால் அரசோ, முதியோர் பாதிக்கப்படும் வகையில் ஓய்வூதியத் திட்டத்தை மாற்றி அமைத்திருக்கிறது. முறை சார்ந்த தொழிலாளர்களுக்கே ஓய்வூதியப் பலகள் கிடைக்காதபோது, பிற தொழிலாளர்கள் எவ்வாறு அதனை பெற முடியும்,
தற்போது வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியத் திட்டங்களிலேயே முரண்பாடும், ஒழுங்கின்மையும் காணப்படுகின்றன. உதாரணமாக 5 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெறும் சட்டசபை உறுப்பினர் ஒருவர் முழு ஓய்வூதியம் பெறுகிறார். இதிலும் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபாடு உண்டு. மத்தியப்பிரதேசத்தில் ஒருநாள் பணியாற்றிய எம்.எல்.ஏ.வும், அரியானாவில் 7 முறை தேர்வானஎம்.எல்.ஏ.வும்ரூ.2.38லட்சம் மாதாந்திர ஓய்வூதியம் பெறுகிறார்கள். அரசு, தனியார் துறைகளில் பணிபுரிந்து ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு அவர் கடைசியாகப் பெற்ற ஊதியத்தில் சரிபாதியை ஓய்வூதியமாக அளிப்பதே சரியானதாக இருக்கும். ஆனால் அரசோ, அரசு ஊழியர்களின் ஓய்வூதியத்தில் கைவைத்திருக்கிறது. அரசு இதற்கு முன் ஊழியர்களுக்கு அளித்து வந்த ஓய்வூதியப் பயன்களை அதிகரிக்காவிட்டாலும் அவற்றை குறைக்காமலேனும் இருக்கலாம். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டுவராமல் அரசு தாமதிப்பது எந்த வகையிலும் நியாயமாகாது.
கருத்துகள் இல்லை