தமிழகத்தில் தனியாக மாநில கல்வி கொள்கை உருவாக்கப்படும்
தமிழக கல்வி முறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது தமிழக அரசு கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையின் போது தமிழக அரசு கல்வியின் தரத்தை தீர்மானிக்க மட்டுமே மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது.
மேலும் மாணவர்கள் இந்த மொழியில் தான் கல்வி கற்க வேண்டும் என்று கூறுவது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று தெரிவித்துள்ளது. அதனால் மீண்டும் கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் தனியாக மாநில கல்வி கொள்கை உருவாக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தனியாக மாநில கல்வி கொள்கை உருவாக்கப்படும்
 
        Reviewed by Rajarajan
        on 
        
10.11.22
 
        Rating: 

கருத்துகள் இல்லை