மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மாதம் முதல் 4% அகவிலைப்படி உயர்வு..?
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டிற்கு இரண்டு முறை அதாவது ஜனவரி மற்றும் ஜூலை ஆகிய மாதங்களில் அகவிலைப்படியை உயர்த்தி அளிக்கப்படுகிறது.
இந்த உயர்வு பண வீக்க விகிதத்தினை பெருத்து மத்திய அரசு ஊழியர்களுக்கு விலை உயர்வை சமாளிக்கும் வகையில், AICPI குறியீட்டின் படி இந்த அகவிலைப்படி நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்நிலையில் வரும் ஜனவரி மாதம் AICPI படி உயர்வு 4% ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கான அறிவிப்பு வரும் ஜனவரி மாதம் புத்தாண்டு சிறப்பு அறிவிப்பாக வெளியாகும் என்று அரசு தரப்பு வட்டாரங்கள் கூறுகின்றன. இதன் மூலம் அடிப்படை சம்பளமாக ரூ.18,000 பெறும் ஊழியர்கள் 4% அகவிலைப்படி உயர்வினால் மாதம் ரூ.720 வீதமும், அதிகபட்ச ஊதியமான ரூ.56,900 பெறும் ஊழியர் மாதம் ரூ.2,276 ம் கூடுதலாக பெறுவார்கள்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மாதம் முதல் 4% அகவிலைப்படி உயர்வு..?
Reviewed by Rajarajan
on
15.11.22
Rating:
கருத்துகள் இல்லை