Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

தமிழக அரசு ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி


 வணக்கம் தமிழக அரசு ஊழியர்களுக்கு ஒரு முக்கியமான செய்தி என்னவென்றால், அரசு ஊழியர்கள் இனி அரசு முன்பணத்தின் மூலமாக மின்சார வாகனங்களை வாங்க புதிய அறிவிப்பு ஒன்றை தமிழக நிதித்துறை அறிவித்துள்ளது. ஏற்கனவே அரசு ஊழியர்களுக்கு அவர்களுடைய சம்பள விகிதத்தை பொறுத்து இருசக்கர வாகனம் அல்லது நான்கு சக்கர வாகனங்களை வாங்குவதற்கு அரசு முன் பணம் வழங்கி வருகிறது. இதை மாதத் தவணையாக மீண்டும் திருப்பி செலுத்தி வருகின்றனர். 


இந்நிலையில் அரசு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று தற்சமயம் மின் வாகனங்களை வாங்குவதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் அரசுக்கு காற்று மாசுபாடு குறையும் என கருதி அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம் இனி அரசு ஊழியர்கள் மிக எளிதாக மின் வாகனம் வாங்க இயலும்.  


இது ஒரு முக்கியமான சலுகையை பார்க்கப்படுது.  இதன் மூலமாக இருசக்கர வாகனமோ அல்லது நான்கு சக்கர வாகனமாக வாங்கிக் கொள்ள முடியும். இருசக்கர வாகனத்தை பொருத்தவரை அதிகபட்சமாக ஒரு லட்சம் ரூபாய் அனைத்து அரசு ஊழியர்களுக்கு வழங்க உள்ளது. நான்கு சக்கர வாகனத்தை பொருத்தவரை அவர்கள் வாங்கும் சம்பளத்தை பொறுத்து மாறுபாடு அடையும் உதாரணமாக இடைநிலை ஆசிரியர் அல்லது அதற்கு இணையாக உள்ள ஊழியர்கள் முதல் முதுகலை ஆசிரியர் அல்லது இளநிலை உதவி பொறியாளர் வரை நான்கு லட்சம் ரூபாய்க்கு 6 லட்சம் ரூபாய் அளிக்கப்படுகிறது அதற்கு மேல் உள்ள மாவட்ட அளவிலானஅரசு ஊழியர்கள் நிலையில் 10 லட்சம் ரூபாயும். மாநில அளவிலான அரசு ஊழியர்களுக்கு 14 லட்சம் ரூபாயும் வங்க உள்ளது. மேலும் இந்த வாகனம் வாங்குவதன் மூலம் வருமான வரித்துறையில் வாகனம் வாங்கிய முழு பணத்தையும் நாம் வரியிலிருந்து கழித்து கொள்ளலாம். இது அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான தருணம்.


ஏனெனில் திமுக அரசு தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளான பழைய ஓய்வூதிய திட்டம் மற்றும் இன்ன பிற சலுகைகளை வழங்காது இருந்து வருகிறது. இந்த தருணத்தில் இது வழங்குவது ஒரு மகிழ்ச்சியாக பார்க்கப்படுகிறது. முக்கிய குறிப்பு ஏற்கனவே இருசக்கர வாகனமோ அல்லது நான்கு சக்கர வாகனமும் வாங்கி இருந்தால் இதை வாங்குவதற்கு அந்த ஊழியர் தகுதியற்றவர் ஆவார்.


தமிழக அரசு ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி தமிழக அரசு ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி Reviewed by Rajarajan on 13.11.22 Rating: 5

கருத்துகள் இல்லை