OPS பழைய ஓய்வூதிய திட்ட அறிவிப்பில் ஏமாற்றம் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள்
பஞ்சாப் அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பழைய ஓய்வூதியத் திட்டத்தை மறுசீரமைப்பதற்கான அறிவிப்பில் உள்ள அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில், ஆம் ஆத்மி அரசுக்கு எதிராக பஞ்சாப் அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஓய்வூதியத் திட்ட (ஓபிஎஸ்) அறிவிப்பில் எந்த விதமான கட்டமைப்பை உருவாக்காமல் வெறும் ஒரு வரி செய்தியாகவே உள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) நடைமுறை படுத்த விரிவான திட்டம் மற்றும் நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை பஞ்சாப் அரசாங்கம் இன்னும் அறிவிக்காத நிலையில். சண்டிகரில் ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) அரசுக்கு எதிராக பஞ்சாப் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இங்குள்ள செக்டார் 17ல் சஞ்ச முலாஜம் மஞ்ச் பஞ்சாப் மற்றும் யூடி ஆகிய அமைப்புகள் நடத்திய பேரணியில், போராட்டக்காரர்கள் அரசு அறிவிப்பின் நகலை கிழித்து எறிந்தனர். குஜராத் சட்டமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு செப்டம்பரில் ஓபிஎஸ் பக்கம் திரும்பப் போவதாக முதலில் அறிவித்த ஆம் ஆத்மி அரசு, நவம்பர் 18 அன்று அதைச் செயல்படுத்துவதற்கான சுருக்கமான அறிவிப்பை வெளியிட்டது. இது ஊழியர் சங்கங்களின் எதிர்ப்புகளுக்கு வழிவகுத்தது.
பஞ்சாப் சிவில் செயலக ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் சுக்செயின் சிங் கெஹ்ரா, கூறுகையில் அரசாங்க அறிவிப்பு பொருத்தமானது அல்ல என்றும் வெறும் எழுத்துப்பூர்வ உத்தரவாதமே தவிர வேறொன்றுமில்லை என்றார். “சிவில் சர்வீசஸ் விதிகளில் திருத்தம் செய்யாமல், விரிவான ஓய்வூதியக் கொள்கையை குறிப்பிடாமல் ஆம் ஆத்மி அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும், பழைய ஓய்வூதியத் திட்டம் எந்த நாளிலிருந்து அமல்படுத்தப்படும் என்று கடிதத்தில் குறிப்பிடப்படவில்லை,'' என்றார்.
OPS பழைய ஓய்வூதிய திட்ட அறிவிப்பில் ஏமாற்றம் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள்
Reviewed by Rajarajan
on
27.11.22
Rating:
கருத்துகள் இல்லை