10, 12-ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கு தேர்தல் பணி இல்லை
மகாராஷ்டிர மாநிலத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு ஆசிரியர்கள் மக்களவைத் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அந்த வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடைபெறுவதை முன்னிட்டு மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது. மகாராஷ்டிரத்தில் மொத்தமுள்ள 48 மக்களவைத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 11 முதல் ஏப்ரல் 28-ஆம் தேதி வரை 4 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது.
அதே நேரத்தில் அங்கு 10 மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்வுகளுக்கும் மாணவர்கள் முழுவீச்சில் தயாராவார்கள். எனவே, இந்த விஷயத்தை மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி சிக்ஷா பாரதியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.இதையடுத்து, பல்வேறு துறையினருடன் இது தொடர்பாக தேர்தல் ஆணையம் கலந்துரையாடியது.
இதையடுத்து, 10 மற்றும் 12-ஆம் வகுப்பு ஆசிரியர்களைத் தேர்தல் பணியில் ஈடுபடுத்த வேண்டாம் என்று முடிவெடுக்கப்பட்டது.

Reviewed by Rajarajan
on
14.3.19
Rating:
கருத்துகள் இல்லை