பொது இடங்களில் பப்ஜி விளையாடிய மாணவர்கள் கைது
ராஜ்கோட்: குஜராத் மாநிலத்தில், தடை செய்யப்பட்ட, "பப்ஜி" விளையாட்டை, பொது இடத்தில் விளையாடிய, கல்லுாரி மாணவர்கள், 10 பேரை, போலீசார் கைது செய்தனர்.
"பப்ஜி" என்ற, "ஆன்லைன்" விளையாட்டு, இளைய தலைமுறையினரிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.இதை விளையாடும் மாணவர்களின் அறிவுத்திறன் குறைந்து, தேர்வுகளில் தோல்வியடைவதாகவும், வன்முறை மற்றும் கொலை போன்றவற்றில் ஈடுபடுவதாகவும் புகார் எழுந்தது.
இதையடுத்து, இந்த விளையாட்டுக்கு தடை விதிக்கும்படி, பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. ஜனவரியில், குஜராத் மாநிலத்தில், இந்த விளையாட்டுக்கு தடை விதிக்கப்பட்டது. நேற்று முன்தினம், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், பொது இடங்களில், தடை செய்யப் பட்ட, &'பப்ஜி&' விளையாட்டை விளையாடிய, 10 கல்லுாரி மாணவர்களை, போலீசார் கைது செய்தனர்.
பொது இடங்களில் பப்ஜி விளையாடிய மாணவர்கள் கைது
Reviewed by Rajarajan
on
15.3.19
Rating:
Reviewed by Rajarajan
on
15.3.19
Rating:


கருத்துகள் இல்லை