மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் குறைந்தால் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது – மதுரை உயர் நீதிமன்றம் தீர்ப்பு
மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் குறைந்தால் ஆசிரியர்கள் பொறுப்பல்ல என மதுரை உயர் நீதிமன்றம் கிளை தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆண்டுதோறும் நடக்கும் இறுதி தேர்வில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் ஆனது குறைந்தால் அதற்கு ஆசிரியர்கள் மட்டும் பொறுப்பு அல்ல.
இது மாணவர் மற்றும் ஆசிரியர் இருவரும் இணைந்து செயல்படுத்த வேண்டிய ஒரு கூட்டு முயற்சி. மாணவர்களின் சிந்தனை மற்றும் செயல்பாடுகள் கல்வியின் மீது நாட்டம் இல்லை என்றால் தேர்ச்சி சதவீதம் ஆனது குறைய வாய்ப்பு இருக்கிறது. எனவே தேர்ச்சி சதவீதம் ஆனது ஆசிரியர்களின் சாராதது என மதுரை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதன் மூலம் ஆசிரியர்களை தேர்ச்சி சதவீதம் குறைந்ததற்கான காரணத்தைக் கொண்டு அவர் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்க கூடாது என தீர்ப்பு வழங்கியுள்ளது.
மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் குறைந்தால் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது – மதுரை உயர் நீதிமன்றம் தீர்ப்பு
Reviewed by Rajarajan
on
10.3.19
Rating:
கருத்துகள் இல்லை