அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு - இனி ஜீன் 1-க்கு பதிலாக ஏப்ரல் 1 முதலே மாணவர்கள் சேர்க்கையினை தொடங்க வேண்டும் - பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு...
பள்ளி கல்வி இயக்குனர் வெளியிட்டுள்ள செயல்முறை கடிதத்தில் 2019-20 ஆம் கல்வியாண்டு அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க சில வழிமுறைகளை அறிவித்து உள்ளது.
மாணவர் சேர்க்கையை அதிகரிக்க எல்கேஜி / யுகேஜி தொடங்கி பன்னிரண்டாம் வகுப்பு வரை அனைத்து வகுப்பிற்கும் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் . 
சேர்க்கையின் போது எல்லா சான்றிதழ்களையும் பெறுதல் வேண்டும் என்பது அவசியமில்லை பின்னாளில் வழங்கினால் போதுமானது. 
மாணவர் சேர்க்கையை emis இல் உள்ளீடு செய்தல் வேண்டும். 
எல்கேஜி மற்றும் யுகேஜி சேர்க்கைக்கான வயது வரம்பு பிற நிபந்தனைகள் வழக்கம் போல பின்பற்ற வேண்டும். 
பதினோராம் வகுப்பு பொருத்தமட்டில் ஏப்ரல் முதல் நாளிலிருந்து சேர்த்துக்கொள்ளலாம். பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் மதிப்பெண் சான்றிதழ் அடிப்படையில் அவர்களுக்கு குரூப் உறுதி செய்யப்பட வேண்டும். 
என விதிமுறைகளை வகுத்து அதனடிப்படையில் அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான ஆயத்த பணியில் ஏப்ரல் மாதம் முதலே செயல்படுத்த வேண்டும் என அறிவித்துள்ளது. 
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு - இனி ஜீன் 1-க்கு பதிலாக ஏப்ரல் 1 முதலே மாணவர்கள் சேர்க்கையினை தொடங்க வேண்டும் - பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு...
 
        Reviewed by Rajarajan
        on 
        
20.3.19
 
        Rating: 
 
        Reviewed by Rajarajan
        on 
        
20.3.19
 
        Rating: 


பல வியாதிகளுக்கு மருந்தாக்கும் வெந்தியதின் பலன்கள் பற்றி தெரிந்துகொள்வோம்...!
பதிலளிநீக்கு