இனி வாட்ஸ் அப் செயலி ஒன்று போதும் வேறு செயலிகளுக்கு வேலை இல்லை
வாட்ஸ்அப் நிறுவனம், ஆப் உள்ளேயே இயங்கும் புதிய பிரவுசர் வசதியை கொண்டு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது குறித்து வெளியாகி வரும் தகவலின்படி, வாட்ஸ்அப்பில் பகிரப்பட்டு வரும் லிங்க்குகளை திறக்கும் போது, அது கூகுள் குரோம் போன்ற வேறு ப்ரவுசருக்கு செல்லாமல், வாட்ஸ்அப்பின் சொந்த பிரவுசர் மூலம் ஆப் உள்ளேயே திறக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய அப்டேட் மூலம், லிங்குகள் திறக்க மொபைல் எடுத்துக்கொள்ளும் நேரம் குறையும் என கூறப்படுகிறது.
தற்போது, இந்த அப்டேட்டுக்கான பணிகள் நடைபெற்று வருவதால், வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட்டில் இந்த சேவை கிடைக்காது என்றும், விரைவில் தனி அப்டேட் மூலம் இது வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இன்-ஆப் பிரவுசர் அப்டேட், ஆண்ட்ராய்டு 4.1 அல்லது அதற்கு பிறகு வந்த இயங்குதளங்களில் மட்டுமே செயல்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இனி வாட்ஸ் அப் செயலி ஒன்று போதும் வேறு செயலிகளுக்கு வேலை இல்லை
Reviewed by Rajarajan
on
17.3.19
Rating:
கருத்துகள் இல்லை