Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

மத்திய அரசில் வேலை வாய்ப்பு - SSC 1000 டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் பணி


டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் உள்ளிட்ட பணிகளுக்கான தேர்வு பிளஸ்-2 படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் ஸ்டாப் செலக்சன் கமிஷன் (எஸ்.எஸ்.சி) மத்திய அரசு துறைகளில், பிளஸ்-2 தரத்திலான கீழ்நிலை பணியிடங்களுக்கான தேர்வை அறிவித்துள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:- ஸ்டாப் செலக்சன் கமிஷன் (எஸ்.எஸ்.சி) பல்வேறு மத்திய அரசுத்துறை பணியிடங்களை நிரப்பி வருகிறது. தற்போது பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள பிளஸ்-2 தகுதி உடையவர்களுக்கான போஸ்டல் அசிஸ்டன்ட்/ சோர்டிங் அசிஸ்டன்ட், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் மற்றும் லோயர் டிவிஷன் கிளார்க் போன்ற பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இந்த பணிகளுக்கு ஒருங்கிணைந்த செகண்டரி லெவல் தேர்வு-2019 மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஒவ்வொரு பணிக்குமான காலியிட விவரம் இன்னும் அறிவிக்கப்படவில்லை. கடந்த வருடம் 3 ஆயிரத்து 259 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டன. எனவே இந்த வருடமும் ஆயிரக்கணக்கான பணியிடங்கள் நிரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்வு எழுத விரும்பும் விண்ணப்பதாரர் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரம் இனி பார்க்கலாம்... வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 1-8-2019-ந் தேதியில் 18 வயதினை கடந்தவராகவும், 27 வயதிற்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். அதாவது 2-8-1992 மற்றும் 1-8-2001-ந் தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும். கல்வித் தகுதி: அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் மேல் நிலை கல்வியில் (12-ம் வகுப்பு) அல்லது அதற்கு நிகரான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வு முறை: விண்ணப்பித்தவர்கள் கணினித் தேர்வுக்கு உட்படுத்தப்படுவார்கள். அதில் வெற்றிபெறுபவர்களுக்கு தட்டச்சு தேர்வு, திறமைத் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவற்றில் பணிக்கு அவசியமான தேர்வு முறைகள் பின்பற்றப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அசல் மதிப்பெண் சான்றிதழ்களும் சரிபார்க்கப்படும். கட்டணம்: விண்ணப்பதாரர்கள் கட்டணமாக ரூ.100 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். அனைத்துப் பிரிவு பெண் விண்ணப்பதாரர்கள், முன்னாள் படைவீரர்கள், ஊனமுற்றவர்கள் மற்றும் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் இருப்பவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். பார்ட்-1 மற்றும் பார்ட்-2 ஆகிய இரு நிலைகளில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். இறுதியில் பூர்த்தியான விண்ணப்பத்தை 2 கணினிப் பிரதிகள் எடுத்து வைத்துக் கொள்ளவும். இதற்கான கணினி தேர்வு (முதல்நிலை-1) ஜூலை மாதம் 1-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இரண்டாம் நிலை தேர்வு செப்டம்பர் மாதம் 29-ந் தேதி நடக்கிறது. ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் 5-4-2019-ந்தேதி ஆகும். மேலும் விரிவான விவரங்களை www.ssc.nic.in என்ற இணையதள முகவரியில் பார்க்கலாம்.
மத்திய அரசில் வேலை வாய்ப்பு - SSC 1000 டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் பணி மத்திய அரசில் வேலை வாய்ப்பு - SSC 1000 டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் பணி Reviewed by Rajarajan on 16.3.19 Rating: 5

கருத்துகள் இல்லை